சுதீப்புடன் நடிக்க ஆசை : தனுஷ் பேச்சு

Bookmark and Share

சுதீப்புடன் நடிக்க ஆசை : தனுஷ் பேச்சு

ராக் லைன் வெங்கடேஷ் வழங்கும் ராம்பாபு புரொடெக்ஷன்ஸ் தயாரிக்கும் முடிஞ்சா இவன புடி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் இப்படத்தின் கதாநாயகன் கிச்சா சுதீப் , இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் , தயாரிப்பாளர் சூரப்பா பாபு , இசையமைப்பாளர் டி.இமான் , பாடலாசிரியர் மதன் கார்க்கி மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் தனுஷ் ,சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். :

விழாவில் நடிகர் தனுஷ் பேசியது, எனக்கு கிச்சா சுதீப் அவர்களை மிகவும் பிடிக்கும். நான் ஈ படத்தில் அவரின் நடிப்பை கண்டு வியந்தேன். நான் எந்த ஓர் நடிகரின் நடிப்பை பார்த்தும் வியந்து அவர்களுக்கு கால் செய்து பேசியது இல்லை. ஆனால் கிச்சா சுதீப் அவர்களுக்கு கால் செய்து அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

நான் ஈ படத்தை பார்த்த மாபெரும் இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள் சரியான தேர்வு குழு அமைந்தால் சுதீபுக்கு நிச்சயம் நேஷனல் அவார்ட் கிடைக்கும். நான் அந்த தேர்வு குழுவில் இருந்தால் நிச்சயம் உங்களுக்கு தேசிய விருது கொடுத்து இருப்பேன் என்று கூறினார். அதை நான் அவரிடம் சொல்வதற்கு சரியான இடம் இதுதான் என்று நினைக்கிறேன்.

எனக்கு சில நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்று அசை உண்டு சிவாவுடன் நான் நடித்துவிட்டேன், விஜய் சேதுபதியுடன் நடித்துவிட்டேன் மிக விரைவில் மீண்டும் நாங்கள் இனைந்து நடிக்கவுள்ளோம். ஆனால் எனக்கு கிச்சா சுதீப்புடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகம் என்று கூறினார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions