பீட்டாவில் உள்ள நடிக நடிகர்களுக்கு தடை!

Bookmark and Share

பீட்டாவில் உள்ள நடிக நடிகர்களுக்கு தடை!

தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், பீட்டா அமைப்புக்கு ஆதரவாகவும் கருத்து கூறும் நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள் எதுவும் இனிமேல் அமெரிக்க, கனடா போன்ற நாடுகளில் திரையிடுவதற்கு எதிராக செயல்படப்போவதாகவும் அவர்களை விழாக்களுக்கு அழைப்பதை இன்றுமுதல் தவிர்க்குமாறும் வட அமெரிக்க தமிழர்கள் சகல அமைப்பாளர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

பெருமளவிலான அமைப்புகளிடம் இருந்து இதற்கான ஆதரவு கிடைத்து விட்டதாகவும் அவர்கள் பீட்டா அமைப்பில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ளுகிறோம் என்ற அறிவிப்பை வெளியிட்டால்  மட்டுமே அவர்களுக்கு இனிமேல் நிகழ்ச்சிக்கு வரும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

இத்துடன் நின்றுவிடாமல் ஐரோப்பா மற்றும் பல நாடுகளில் இவர்களை அழைத்து நிகழ்ச்சி செய்யும் தமிழ் உணர்வுள்ள சங்கங்களும் இத்தடையை அமுல்படுத்துமாறும் தமிழின் உணர்வால் கேட்டுக்கொள்ளுகின்றார்கள்.

இனிமேல் பீட்டாவில் இருந்தால் டாட்டா!  


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions