தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு தேதி அறிவிப்பு

Bookmark and Share

தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு தேதி அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் 'தொடரி' மற்றும் 'கொடி' ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. தனுஷ் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தை முடித்தவுடன் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. இதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் ‘வட சென்னை’ படம் அடுத்த வருடம் தொடங்கும் என செய்தி வெளியானது. ஆனால் தற்போது இதில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பை வரும் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை முடித்த பிறகுதான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். 

‘வடசென்னை’ படத்தில் தனுஷூக்கு ஜோடியாக சமந்தா மற்றும் ஆண்ட்ரியா நடிக்கவுள்ளார்கள். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.


Post your comment





Related News
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்!
பொது இடத்தில் மங்காத்தா நடிகர் செய்த அதிர்ச்சியான செயல்! உண்மை வெளியிட்ட இயக்குனர்
தியேட்டர்களில் IPL கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு? - ரசிகர்கள் கொண்டாட்டம்.!
திடீரென்று ரசிகர்களை சந்தித்த விஜய்- வைரலாகும் வீடியோ
எங்கப்பா பர்ஸ்ட் லுக்? ரசிகர்களை கடுப்பாக்கிய தனுஷ் - இணையத்தை தெறிக்கும் மீம்ஸ்.!
இன்று தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ், கொண்டாட தயாரா? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions