தனுஷ் தயாரிக்கும் புரடக்ஷன் நம்பர் 8

Bookmark and Share

தனுஷ் தயாரிக்கும் புரடக்ஷன் நம்பர் 8

பாலாஜிமோகன் இயக்கும் மாரி படத்தின் படப்பிடிப்பில் கடந்த சில மாதங்களாக  பிஸியாக  நடித்துக் கொண்டிருந்தார் தனுஷ். இப்படத்தில் அவருக்கு வட சென்னை தாதா வேடம் என்பதால் சற்றே முறுக்கிவிடப்பட்ட மீசையுடனும், லேசான குறுந்தாடி உடனும் வித்தியாசமான  கெட்அப்பில் இருந்தார் தனுஷ்.

மாரியின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்டதால், மீசை, தாடியை எடுத்துவிட்டு தற்போது ஸ்கூல் பையன்போல் காட்சியளிக்கிறார் தனுஷ். வேலையில்லா பட்டதாரி படத்தின் இயக்குநர் வேல்ராஜ் இயக்கும் படத்துக்காகத்தான் இந்த தோற்றம்! இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.  

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்ஸன் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கும் அனிருத்தே இசையமைக்கிறார்.  

வேலையில்லா பட்டதாரி படத்தின் கூட்டணியிலேயே இப்படம் உருவாகிற காரணத்தினாலோ என்னவோ இது வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் என்ற செய்தி  பரவியது.

இது இப்படத்தின்  இரண்டாம் பாகம் இல்லை என்பதை தற்போது தனுஷ் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதுமட்டுமல்ல இப்படத்துக்கு இன்னும் தலைப்பு சூட்டவில்லை. கிளாப்போர்டில் கூட வுண்டர்பார் பிலிம்ஸின் புரடக்ஷன் நம்பர் 8 என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions