ஒரே பாகமாக உருவாகும் தனுஷின் வட சென்னை!

Bookmark and Share

ஒரே பாகமாக உருவாகும் தனுஷின் வட சென்னை!

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையவிருக்கும் படம் வட சென்னை. முதலில் இப்படத்தை இரண்டு பாகமாக உருவாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இப்படம் ஒரே பாகமாக உருவாக போகிறதாம்.

மேலும் இப்படத்தை தனுஷுடன் இணைந்து பிரபல லைக்கா நிறுவனமும் தயாரிக்கவுள்ளதாம். இதன் படப்பிடிப்பு ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் தொடங்கப்படவுள்ளது. பீரியட் படமான இதில்,35 ஆண்டுகால வடசென்னை பகுதியின் நிழலுலக சம்பவங்களை திரையில் கொண்டுவர முடிவு செய்துள்ளார் வெற்றிமாறன்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions