இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியான தனுஷ், விஜய் சேதுபதி படங்கள்

Bookmark and Share

இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியான தனுஷ், விஜய் சேதுபதி படங்கள்

திருட்டு வி.சி.டி பாதிப்பில் இருந்த திரையுலகம் இப்போது புதிய படங்களை உடனுக்குடன் வெளியிடும் இணையதளங்கள் பிடியில் சிக்கி தவிக்கிறது. ஏற்கனவே திருட்டு வி.சி.டிக்களை கட்டுப்படுத்த திரையுலக சங்கத்தினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தனர். ரகசிய குறியீடு மூலம் புதிய படங்களை பதிவு செய்யும் திரையரங்குகள் கண்காணிக்கப்பட்டன. திருட்டு வி.சி.டிக்களை விற்பனை செய்தவர்களை போலீசாரிடம் பிடித்து கொடுத்தார்கள்.

இதன் மூலம் திருட்டு வி.சி.டிக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதாக கருதப்பட்டது. இந்த நிலையில், இணையதளங்களில் புதிய படங்களை வெளியிடும் இன்னொரு நூதன திருட்டுகள் பட உலகினருக்கு பெரிய தலைவலியாக வந்து நிற்கிறது. ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான கபாலி படத்தை இணையதளங்களில் பார்க்கலாம் என்று அறிவிப்புகள் வந்தன.

இதைத்தொடர்ந்து படக்குழுவினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து கபாலி படத்தை இணையதளங்களில் வெளியிடக்கூடாது என்று தடை உத்தரவு பெற்றனர். கபாலி படத்தை வெளியிட தயாரான இணையதளங்களும் முடக்கப்பட்டன. ஆனாலும் அதையும் மீறி ‘கபாலி’ படம் திரைக்கு வந்த அதே நாள் காலையில் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. இது திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து திரைக்கு வந்துள்ள தொடரி, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளி வந்துள்ளன. அவற்றை பதிவிறக்கம் செய்து பலரும் பார்த்து வருகிறார்கள். தொடரி கடந்த வியாழக்கிழமையும் ஆண்டவன் கட்டளை வெள்ளிக்கிழமையும் திரைக்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இரண்டு படக்குழுவினரும் அதிர்ச்சியில் உள்ளனர். இணையதளங்களில் வந்ததால் இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் டுவிட்டரில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை தடுப்பதற்கு களத்தில் இறங்கும்படி தனுசுக்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார். இதுபோன்ற குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் விஷால் முன்னிலையில் இருப்பதாக நடிகை குஷ்பு டுவிட்டரில் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
புதிய படங்கள் உடனுக்குடன் தொடர்ந்து இணையதளங்களில் வெளிவருவதால் அடுத்தடுத்து படங்களை திரைக்கு கொண்டு வர உள்ள தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என்று புரியாமல் தவிப்பில் இருக்கிறார்கள். 


Post your comment

Related News
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
தனுஷை முந்துவாரா விஜய், இன்னும் சில நாட்கள் தான்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions