அக்டோபர் 16-ல் விஐபி-2 பர்ஸ்ட் லுக்?

Bookmark and Share

அக்டோபர் 16-ல் விஐபி-2 பர்ஸ்ட் லுக்?

தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியிருந்தார். அமலாபால், சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன், விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த படக்குழு மீண்டும் இணைந்து ‘விஐபி-2’ என்ற பெயரில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளது. இப்படத்தில் தனுஷே நாயகனாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

ஆனால், நாயகிகளாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், தனுஷின் அப்பா, அம்மாவாக கே.எஸ்.ரவிக்குமாரும், ராதிகா சரத்குமாரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்படாமலேயே உள்ளது. ஆகையால், விரைவில் படத்தின் தலைப்பை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, வருகிற அக்டோபர் 16-ந் தேதி அனிருத் பிறந்தநாளில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை வெளியிடுவார்கள் என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதுகுறித்து தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, விஐவி-2 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதுவரை பொறுமையாக காத்திருந்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். 


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions