மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற தனுஷ்!

Bookmark and Share

மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற தனுஷ்!

பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் விசாரணை. வெளியீட்டுக்கு முன்பே சர்வேதச அளவில் பல அங்கீகாரங்களை பெற்ற இப்படம் வெளியான பிறகு பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் இப்படத்துக்கு மூன்று பிரிவுகளில் தேசிய விருது கூட கிடைத்தது. இந்நிலையில் ‘சிறந்த வெளிநாட்டுப் படம்’ என்கிற பிரிவில் ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் படமாக விசாரணை தற்போது தேர்வாகியுள்ளது.

இதனால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், டிவிட்டரில் ரசிகர்கள் மற்றும் மீடியாக்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions