தர்மதுரை பாடலுக்கு ப்ரோமோ தயார் செய்பவர்களை மகிழ்விக்கும் தயாரிப்பாளர்

Bookmark and Share

தர்மதுரை பாடலுக்கு ப்ரோமோ தயார் செய்பவர்களை மகிழ்விக்கும் தயாரிப்பாளர்

விநியோகஸ்தர் ,தயாரிப்பாளர் என்று இயங்கி வந்த ஸ்டுடியோ 9 சுரேஷ் இயக்குநர் பாலா மூலம் ‘தாரை தப்பட்டை’ படத்தில் அறிமுகமாகி ஆர்.கே. சுரேஷ் என்கிற நடிகராகிவிட்டார்.இப்போது நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார்.

இதுவரை விநியோகஸ்தராக 40 படங்களை வெளியிட்டிருக்கிற ஸ்டுடியோ 9 சுரேஷ், ‘சலீம்’ முதல் அண்மையில் வெளியாகியுள்ள ‘தர்மதுரை’ போல சில படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். அண்மையில் வெளிவந்து 50 நாட்களைக்கடந்து வெற்றிப்பாதையில் போய்க்கொண்டிருக்கிறது ‘தர்மதுரை’.

இந்தப்படம் குடும்பத்துடன் மக்களை திரையரங்கிற்கு படையெடுக்க வைத்திருக்கிறது. ‘தர்மதுரை’ படத்தின் பாடல்களை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். எந்த அளவுக்கு என்றால் விளக்கவே வியப்பூட்டும். ‘மக்க கலங்குதப்பா ‘பாடலுக்கு தாங்களே நடனமாடியும் குடும்பத்துடன் நடனமாடியும்,குழுவாக நடனமாடியும் பலவாறாக யூடியூபில் பதிவேற்றி அவற்றை லட்சணக்கணக்கான பார்வையாளர்கள் பார்க்க வைத்துள்ளார்கள். இன்றும் பார்த்து வருகிறார்கள்.இப்படி ஏராளமான வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு ரசிக்கப்பட்டு வருகின்றன.

இப்படி ‘தர்மதுரை’ படத்துக்கு மக்களே உருவாக்கிய பல ப்ரோமோ பாடல்கள் கலக்கி வருகின்றன.சாதாரண சினிமாப்பாட்டு என்பது இன்று புதிய பரிமாணத்தை அடைந்து மகிழ்விக்கிறது என்பது காலமாற்றம் சாத்தியப்படுத்தியுள்ள காட்சியாகும்.

இப்படி வீடியோக்களை பதிவிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்து மகிழும் தயாரிப்பாளர் ஸ்டுடியோ 9 சுரேஷ் ,அவர்களைப் பாராட்டவும் அங்கீகரிக்கவும் விரும்புகிறார்.

பதிவேற்றிய ஆர்வலர்களை தேர்வு செய்து, ‘தர்மதுரை’படத்தின் 75வதுநாள் விழா மேடையில் திரைப்பிரபலங்கள் மத்தியில் அங்கீகரிக்கவும் பாராட்டவும் நடனத்திறமையுள்ளவர்களுக்கு விழாமேடையிலேயே ஆட வாய்ப்பளிக்கவும் எண்ணியுள்ளார். இதற்காக திறமையான ஆட்டக்காரர்கள் அந்தப்பாடலுக்கு நடனம் ஆடி வீடியோக்களை பதிவேற்றக் கேட்டுக்கொள்கிறார்.

ஸ்டுடியோ 9 சுரேஷ், தன் தயாரிப்பில் குடும்பத்துடன் பார்க்கும் வகையிலான வணிகரீதியான தரமான படங்கள் தயாரிக்கவே ஆசைப்படுகிறார்..நடிப்பதை எடுத்துக்கொண்டால், இவர் இப்போது நடிக்கும் படங்கள் எல்லாம் வெளி நிறுவனப் படங்கள்தான்.

நடிக்கும் படங்கள் பற்றிப் பேசும் போது,” ‘ தனிமுகம்’ என்கிற படம் இப்போது தொடங்கப் பட்டிருக்கிறது. இயக்குபவர் சஜித்.இவர், பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஸின் இணை இயக்குநர். இது ஹீரோயிசக் கதையல்ல. . இருவேறு முகம் காட்டி, நடிப்புத்திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதை.
கதாநாயகனாகவே நடிப்பது என்பது என் கொள்கையல்ல. பிற நாயகர்கள் படங்களில் நல்ல நடிப்பு வாய்ப்புள்ள கதைகளிலும் நடிப்பேன்.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய வேடம் ஏற்றுள்ளேன்.

சரவண ஷ்க்தி இயக்கத்தில் ஒரு படத்திலும் கதை நாயகனாக நடிக்கிறேன். சீனுராமசாமி இயக்கத்தில் ஒரு படம் உள்ளது. இவை தவிர, புதிதாக சிலபடங்களும் இருக்கின்றன.” என்கிறார்.

விஜய் நடிக்கும் பைரவா படத்தில்ஸ்டுடியோ 9 சுரேஷ் வில்லனாக நடிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருந்தன.. அதை சுரேஷ் மறுத்தார்.. “நான் ‘பைரவா ‘படத்தில் நடிக்கவில்லை. அதில் நான் நடிப்பதாக வரும் செய்திகள் தவறானவை ” என்று தானாகப் பரவி வந்த விளம்பரத்தைக்கூட தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது..


Post your comment

Related News
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions