இந்தி நடிகர் தர்மேந்திராவின் 80-வது பிறந்தநாள்: வாழ்த்திய பாலிவுட் பிரபலங்கள்

Bookmark and Share

இந்தி நடிகர் தர்மேந்திராவின் 80-வது பிறந்தநாள்: வாழ்த்திய பாலிவுட் பிரபலங்கள்

நடிகர் தர்மேந்திரா நடிப்பில் வெளியான ‘பந்தினி’, ‘தில் நே பெர் யாட் கியா’, ‘ராஜா ஜனி’, ’ஷோலே’, ‘தரம்வீர்’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி கண்டது.

இந்தி திரையுலகுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் பொருட்டு, கடந்த 1997–ம் ஆண்டு அவருக்கு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 

இதுதவிர, 14–வது பாராளுமன்ற தேர்தலின்போது, பாரதிய ஜனதா சார்பில் அவர் ராஜஸ்தான் மாநிலம் பிகானெர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி., ஆனார். இது மட்டுமின்றி, அவருக்கு கடந்த 2012–ம் ஆண்டு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான 'பத்ம பூஷன்' வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. 

இன்று தனது 80-வது நாளை கொண்டாடிய தர்மேந்திராவுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அவருக்கு நேரிலும், தொலைபேசி, பேஸ்புக், டுவிட்டர் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஷோலே திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது தர்மேந்திராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள அமிதாப் பச்சன், தர்மேந்திரா அன்று பார்த்ததைப்போலவே இன்றும் இளமையாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார். 


Post your comment





Related News
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?
கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்
சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு
பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: அமிதாப்பச்சன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions