கன்னட நடிகர் தர்ஷன் மீது மனைவி மீண்டும் போலீசில் புகார்

Bookmark and Share

கன்னட நடிகர் தர்ஷன் மீது மனைவி மீண்டும் போலீசில் புகார்

கன்னட பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் தர்ஷன். இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த விஜயலட்சுமிக்கும் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு வினீஷ் என்ற மகன் இருக்கிறான். தர்ஷனுக்கும் விஜயலட்சுமிக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. கடந்த 20011-ல் தர்ஷன் மீது விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்தார்.

‘தர்ஷன் தன்னை தினமும் அடித்து துன்புறுத்துகிறார். சிகரெட்டால் சுட்டும் சித்ரவதை செய்கிறார்’ என்று புகாரில் கூறி இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்ஷனை கைது செய்தனர்.

இது அவரது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பஸ் எரிப்பிலும் ஈடுபட்டனர்.

அம்பரீஷ் உள்ளிட்ட முன்னணி கன்னட நடிகர்கள் இந்த பிரச்சினையில் தலையிட்டு சமரச முயற்சியில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வாழ சம்மதித்தனர். விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றார்.

தர்ஷன், ‘இனிமேல் என் மனைவியை நன்றாக பார்த்துக்கொள்வேன். சண்டை போடமாட்டேன். நடந்த நிகழ்வுக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து சந்தோஷமாக சேர்ந்து வாழ்ந்த அவர்களுக்குள் இப்போது தகராறு ஏற்பட்டு மீண்டும் விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார். ‘தர்ஷன் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக புகாரில் கூறி இருக்கிறார்.

புகார் குறித்து விஜயலட்சுமி கூறும்போது, ‘தர்ஷன் என்னை அடித்து துன்புறுத்தினார். இதனால் அவருடன் சேர்ந்து வாழப்பிடிக்காமல் என் பெற்றோர் வீட்டில் வசிக்கிறேன்.

அங்கு வந்தும் ரகளை செய்கிறார். வீட்டு வாட்ச் மேனையும் அடித்து தாக்கினார். எனக்கு இன்னொருவருடன் தவறான உறவு இருப்பதாகவும் பொய் தகவல்களை பரப்பி வருகிறார். அது உண்மையாக இருந்தால் அவர் நிரூபிக்கட்டும்’ என்றார்.

விஜயலட்சுமி புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Post your comment





Related News
முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி
நடிகர் தர்ஷனின் வீடு கால்வாய் ஆக்கிரமிப்பில் தான் உள்ளது: மேயர் தகவல்
கால்வாய் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள நடிகர் தர்ஷனின் வீட்டை இடிக்க முடிவு!
பிரபல நடிகர் தர்ஷனின் வீட்டை 22-ந் தேதி இடிக்க மாநகராட்சி முடிவு
இயக்குனர் பிரியதர்ஷன் - நடிகை லிசி விவாகரத்துக்கு சமரசம்
மனைவியைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற பிரபல நடிகர் கைது.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions