பிரபல நடிகர் தர்ஷனின் வீட்டை 22-ந் தேதி இடிக்க மாநகராட்சி முடிவு

Bookmark and Share

பிரபல நடிகர் தர்ஷனின் வீட்டை 22-ந் தேதி இடிக்க மாநகராட்சி முடிவு

பெங்களூருவில் கடந்த மாதம் கனமழை பெய்தது. இதனால் மடிவாளா, கோடிசிக்கனஹள்ளி, சாரக்கி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியது. மழை நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பெரும் பாதிப்பை உண்டாக்கியது. பல பகுதிகள் தீவாக மாறியதால் மக்கள் பரிதவித்து போயினர். பெங்களூருவில் மழையால் ஏற்பட்ட இந்த பாதிப்பு சென்னை மழை பாதிப்பை நினைவுபடுத்துவதாக இருந்தது.

பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளின் கூட்டத்தை நடத்திய முதல்-மந்திரி சித்தராமையா, ஏரி, கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடங்களை இடித்து தள்ளும்படி உத்தரவிட்டார். இதையடுத்து பெங்களூரு பொம்மனஹள்ளி, மகாதேவபுரா, தொட்ட பொம்மச்சந்திரா, கைகொண்டனஹள்ளி, ராஜராஜேஸ்வரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏரி, கால்வாயை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடங்கள் கடந்த 10 நாட்களாக இடிக்கப்பட்டு வருகின்றன. பெரிய, பெரிய கட்டிங்கள் இடித்து தள்ளப்பட்டுள்ளன. புதிதாக கட்டப்பட்ட வீடுகளும் தரைமட்டம் ஆக்கப்பட்டன.

கலசனஹள்ளியில் சர்வே பணிகள் தாமதமாகி வருவதால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏ.நாராயணபுராவில் மாநகராட்சி கட்டிடத்தை இடிக்கும் பணிகள் நேற்று தொடர்ந்து நடைபெற்றன. தொட்ட பொம்மச்சந்திராவில் உள்ள மக்கள் பழைய சர்வேப்படியே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இதனால் கடந்த சில நாட்களுக்காக அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ராஜராஜேஸ்வரி நகரில் நேற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடந்தன. இந்த நிலையில் பிரபல கன்னட திரைப்பட நடிகர் தர்ஷனின் வீடு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ளது. அவருடைய வீட்டின் ஒரு பகுதி கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ராஜராஜேஸ்வரி மண்டல இணை கமிஷனர் வீரபத்ரப்பா கூறும்போது, “ராஜராஜேஸ்வரி நகரில் நடிகர் தர்ஷனின் வீட்டின் ஒரு பகுதி கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளது சர்வேயில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தர்ஷன் வீட்டுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளோம். வீட்டை இடித்து அகற்ற ஒத்துழைக்குமாறு கூறியுள்ளோம்.

அவர்கள் இதற்கு ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தர்ஷனின் வீட்டை இடிக்கும் பணிகள் வருகிற 22-ந் தேதி தொடங்கும். கால்வாயை ஆக்கிரமித்து எவ்வளவு பெரிய ஆட்கள் கட்டிடங்கள் கட்டி இருந்தாலும் நாங்கள் விட மாட்டோம். நாங்கள் எந்த அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம். எவ்வளவு பெரிய கட்டிடமாக இருந்தாலும் இடித்து தள்ளுவோம்“ என்றார்.

இவ்வாறு வீரபத்ரப்பா கூறினார். 


Post your comment





Related News
முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி
நடிகர் தர்ஷனின் வீடு கால்வாய் ஆக்கிரமிப்பில் தான் உள்ளது: மேயர் தகவல்
கால்வாய் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள நடிகர் தர்ஷனின் வீட்டை இடிக்க முடிவு!
கன்னட நடிகர் தர்ஷன் மீது மனைவி மீண்டும் போலீசில் புகார்
இயக்குனர் பிரியதர்ஷன் - நடிகை லிசி விவாகரத்துக்கு சமரசம்
மனைவியைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற பிரபல நடிகர் கைது.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions