கால்வாய் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள நடிகர் தர்ஷனின் வீட்டை இடிக்க முடிவு!

Bookmark and Share

கால்வாய் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள நடிகர் தர்ஷனின் வீட்டை இடிக்க முடிவு!

பெங்களூரு மாநகராட்சி மேயர் மஞ்சுநாத்ரெட்டி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் ஐடியல் ஹோம் லே-அவுட்டில் நடிகர் தர்ஷனின் வீடு மற்றும் முன்னாள் மந்திரி சாமனூர் சிவசங்கரப்பாவுக்கு சொந்தமான மருத்துவமனை உள்ளது. இவை கால்வாய் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுபற்றி அதிகாரிகள் பரிசீலித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

எனவே நடிகர் தர்ஷனின் வீடு உள்பட 2 கட்டிடங்களையும் இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தர்ஷனின் சகோதரர் தினகர், வீட்டை தாங்களே இடிப்பதாக கூறியுள்ளார். இதற்கு கால அவகாசம் கேட்டுள்ளனர். இதை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். ஒருவேளை அவர்கள் வீட்டை இடிக்கவில்லை என்றால் மாநகராட்சி அதிகாரிகள் அதை இடித்து அகற்றுவார்கள்.

ஐடியல் ஹோம் லே-அவுட்டில் சில வீடுகள் கால்வாய் நிலத்தில் கட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த லே-அவுட்டின் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி எக்காரணம் கொண்டும் நிற்காது. எத்தகைய பெரிய நபர்கள் அழுத்தம் கொடுத்தாலும் அதை நாங்கள் பொருட்படுத்தாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம்.

இவ்வாறு மஞ்சுநாத்ரெட்டி கூறினார். 


Post your comment





Related News
முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி
நடிகர் தர்ஷனின் வீடு கால்வாய் ஆக்கிரமிப்பில் தான் உள்ளது: மேயர் தகவல்
பிரபல நடிகர் தர்ஷனின் வீட்டை 22-ந் தேதி இடிக்க மாநகராட்சி முடிவு
கன்னட நடிகர் தர்ஷன் மீது மனைவி மீண்டும் போலீசில் புகார்
இயக்குனர் பிரியதர்ஷன் - நடிகை லிசி விவாகரத்துக்கு சமரசம்
மனைவியைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற பிரபல நடிகர் கைது.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions