நடிகர் தர்ஷனின் வீடு கால்வாய் ஆக்கிரமிப்பில் தான் உள்ளது: மேயர் தகவல்

Bookmark and Share

நடிகர் தர்ஷனின் வீடு கால்வாய் ஆக்கிரமிப்பில் தான் உள்ளது: மேயர் தகவல்

பெங்களூரு மாநகராட்சி மேயர் மஞ்சுநாத்ரெட்டி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூருவில் ஏரி, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. எங்கெங்கு கால்வாய் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதோ அதை எந்த பாகுபாடும் இல்லாமல் அகற்றப்படும். மகாதேவபுரா மண்டலத்தில் ஆந்திராவை சேர்ந்த ஒரு அரசியல்வாதியின் கட்டிடம் உள்பட பெரிய பெரிய கட்டிடங்கள் இடித்து தள்ளப்பட்டன.

தற்போது பெங்களூருவில் அனைத்து பகுதிகளிலும் நிலஅளவீடு (சர்வே) பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அளவீடு அறிக்கை வந்தவுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மீண்டும் தொடங்கப்படும். காலி இடங்களை அளவீடு செய்வது எளிதானது. கட்டிடங்கள் உள்ள பகுதியை அளவீடு செய்வது மிக கடினமானது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

ஒரே நாளில் அனைத்து கட்டிடங்களையும் இடித்து தள்ள முடியாது. இதற்கு கால அவகாசம் வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியுள்ளவர்கள் எவ்வளவு பெரிய நபர்களாக இருந்தாலும், அவர்களை அரசு விடாது. அந்த கட்டிடங்களை இடித்து அகற்றுவோம்.

அதேபோல் ஆக்கிரமிப்புக்கு உதவிய அதிகாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள நடிகர் தர்ஷனின் வீடு கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளது என்பது அளவீடு நடத்தியதன் மூலம் உறுதியாகியுள்ளது. எனவே, அந்த கட்டிடம் இடிக்கப்படும்.

இவ்வாறு மேயர் மஞ்சுநாத்ரெட்டி கூறினார்.


Post your comment





Related News
முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி
கால்வாய் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள நடிகர் தர்ஷனின் வீட்டை இடிக்க முடிவு!
பிரபல நடிகர் தர்ஷனின் வீட்டை 22-ந் தேதி இடிக்க மாநகராட்சி முடிவு
கன்னட நடிகர் தர்ஷன் மீது மனைவி மீண்டும் போலீசில் புகார்
இயக்குனர் பிரியதர்ஷன் - நடிகை லிசி விவாகரத்துக்கு சமரசம்
மனைவியைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற பிரபல நடிகர் கைது.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions