போட்டியில் வென்று தந்தையின் ஹோட்டலில் டின்னர் சாப்பிட வந்த மகள்..!

Bookmark and Share

போட்டியில் வென்று தந்தையின் ஹோட்டலில் டின்னர் சாப்பிட வந்த மகள்..!

'மிஸ்டர் பட்லர்' மற்றும் 'கம்மத் அண்ட் கம்மத்' ஆகிய படங்களில் சமயற்கலை நிபுணராக நடித்திருந்த திலீப்பிற்கு இயற்கையாகவே சமயலில் ஆர்வம் அதிகம். அதனால் தான் கொச்சியிலும் கோழிக்கோட்டிலும் 'தே புட்டு' (Dhe puttu) என்கிற பெயரில் இரண்டு ஹோட்டல் கிளைகளை நடத்தி வருகிறார்.

சமீபத்தில் கொச்சியில் தனது தந்தை நடத்திவரும் ஹோட்டலுக்கு சாப்பிட வந்தார் மீனாட்சி.  தந்தையின் ஹோட்டலுக்கு மகள் சாப்பிட வருவதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது என்கிறீர்களா..? இருக்கிறது சாமி.

பொதுவாக நடிகர் திலீப் தனது மகள் மீனாட்சியை வெளி இடங்களுக்கு அழைத்து வருவதில்லை. தனது பிரபலத்தால் மகளின் பிரைவசி பாதிக்கப்பட கூடாது என்பதால், மகளுக்கு அவர் விருப்பபடி, சாதாரண வீட்டுப்பெண் போலவே உலாவரும் சுதந்திரம் கொடுத்துள்ளார்.

தனது அம்மா மஞ்சு வாரியர் விவாகரத்துக்கு பிறகும் மீனாட்சி தனது தந்தையுடன் தான் வசித்து வருகிறார். வழக்கமாக இந்த ஹோட்டலில் அவ்வப்போது தனது நண்பர்களுடன் வந்து மீனாட்சி சாப்பிடுபவர்தான்.

ஆனால் இந்த முறை அவர் திலீப்புடன் சாப்பிட வந்தது ஒரு குலுக்கல் போட்டியில் செலக்ட் ஆனதால்தான். 'நட்சத்திரத்துடன் உணவருந்துங்கள்' என திலீப்பின் ஹோட்டலில் ஒரு ஸ்கீம் உள்ளது. அதில் மீனாட்சியின் பெயர் செலக்ட் ஆகவே, தந்தையுடன் சேர்ந்து உணவருந்த ஒரு ரசிகையாகவே வந்து சென்றுள்ளார் மீனாட்சி.


Post your comment

Related News
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
உண்மை தான் கசக்குது - யார் காரணம் புலம்பும் கார்த்திக்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions