5 வருடங்களுக்கு பிறகு தினா இசை அமைத்த படம்

Bookmark and Share

5 வருடங்களுக்கு பிறகு தினா இசை அமைத்த படம்

சின்னத்திரையில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் தினா. அதன் பிறகு பெரிய திரையில் இசை அமைப்பாளர் ஆனார். அன்னை, மிடில் கிளாஸ் மாதவன், நான் பாட நினைப்பதெல்லாம் படங்களுக்கு இசை அமைத்தவருக்கு திருடா திருடி படம் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது.

மன்மதராசா... பாடல் கொலைவெறி பாடலையும் தாண்டி ஹிட்டடித்த பாடல். அதன் பிறகு திருப்பாச்சி, அய்யர் ஐ.பி.எஸ், கொக்கி, திண்டுக்கல் சாரதி, வெடிகுண்டு முருகேசன், கந்த கோட்டை, மலையன், வல்லக்கோட்டை உள்பட 50 படங்களுக்கு மேல் இசை அமைத்தார்.

அதன் பிறகு என்னாச்சு தினாவுக்கு என்று தெரியவில்லை. 2011ம் ஆண்டுக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. கடைசியாக அவர் சீடன் படத்திற்கு இசை அமைத்தார். தற்போது 5 வருட இடைவெளிக்கு பிறகு இரவும் பகலும் வரும் என்ற படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.

அது தற்போது வெளிவந்திருக்கிறது. தினாவுக்கு ஏன் இந்த இடைவெளி? ஸ்பீட் சாங் எனப்படும் விறுவிறுப்பான பாடலுக்கு தனிமுத்திரை பதித்த தினாவின் வேகம் குறைந்தது ஏன்? என்கிற கேள்விக்கான பதில் அவரிடம்தான் இருக்கிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions