ஹாலிவுட் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது: தனுஷ் பேட்டி

Bookmark and Share

ஹாலிவுட் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது: தனுஷ் பேட்டி

ஈரானிய-பிரெஞ்ச் இயக்குனரான மரியான் சத்ராபி இயக்கும் ஹாலிவுட் படவுலகில் தனுஷ் நுழையவுள்ளார். தனுஷ் ஹீரோவாக நடிக்கும் அந்த படத்தில் ‘சான் ஆண்ட்ரியாஸ்’ படத்தின் நாயகி அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோ மற்றும் உமா தர்மன் ஆகியோரும் நடிக்கவிருக்கிறார்கள். 

ஆங்கில காமிக் நாவலை தழுவி இப்படம் தயாராக உள்ளது. ஹாலிவுட் படத்தில் நடிப்பது குறித்து தனுஷ் கூறும்போது, முழு நீள ஹாலிவுட் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்துள்ளது. 

நான் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சரியாக இருக்கும் என்பது இயக்குநர் மர்ஜோன் சத்ராபி அவர்களின் கணிப்பு. இப்படம்  என்னிடமிருந்து வெவ்வேறு விதமான அமசங்கள்கொண்ட கதாபாத்திரங்களை வெளிக்கொண்டு வரும் ஓர் பயணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறன் என்று கூறினார். 

இப்படத்தின் படப்பிடிப்புகளை இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, மொராக்கோ ஆகிய நாடுகளில் படமாக்கவுள்ளனர். இந்த வருடத்தின் இடையில் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
வட சென்னை படப்பிடிப்பு தேதி உறுதியானது - தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷின் அதிரடி அடுத்தடுத்து ஆறு படங்கள்!
ரம்ஜான் தினத்தில் வெளியாகும் தனுஷின் கொடி
தனுஷுக்கு வில்லியான த்ரிஷா!
காக்காமுட்டை, விசாரணை பட வரிசையில் மற்றொரு தரமான படத்தை கொடுக்கும் தனுஷ் !
தனுஷ்-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு என்ன?
தனுஷ் படத்தில் இருந்து அனிருத் விலகியது ஏன்? கசிந்தது உண்மை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions