தனுஷ்-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு என்ன?

Bookmark and Share

தனுஷ்-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு என்ன?

தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க ரெயிலில் படமாக்கப்பட்ட இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 

இந்நிலையில், இப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று படக்குழுவினர் பரிசீலித்து வருகின்றனர். இதற்காக படக்குழுவினர் தற்போது இரண்டு தலைப்புகளை தேர்வு செய்து வைத்துள்ளார்களாம். 

அதாவது, இந்த படம் ரெயில் சம்பந்தப்பட்ட கதை என்பதால் இப்படத்திற்கு ‘ரெயில்’ அல்லது ‘டெல்லி டூ சென்னை’ ஆகிய தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம் என பரிசீலித்து வருகின்றனர். 

இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் தலைப்பு உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைத்துள்ளார்.

 


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions