தனுஷ், சிவகார்த்திகேயன் நேரடி மோதல்...!

Bookmark and Share

தனுஷ், சிவகார்த்திகேயன் நேரடி மோதல்...!

சிவகார்த்திகேயனும், இவரை நாயகனாக உயர்த்தி, அவரை வைத்து சில படங்களைத் தயாரித்த தனுஷும் நேரடியாக மோதிக் கொள்ளும் சூழ்நிலை வந்துவிட்டது. தனுஷ் நடித்த 'அனேகன்', சிவகார்த்திகேயன் நடித்த 'காக்கி சட்டை' ஆகிய இரண்டு படங்களும் பிப்ரவரி மாதம் ஒன்றுக்கொன்று மோத வேண்டிய சூழ்நிலை வந்தது.

அப்போது 'காக்கி சட்டை' படத்தை வெளியிடும் நிறுவனத்திடம் படத்தை இரண்டு வாரங்கள் தள்ளி ரிலீஸ் செய்ய வேண்டுமென்று தனுஷ் கட்டளையிட்டதாக செய்திகள் தெரிவித்தன.

அதனால்தான் 'அனேகன்' படம் பிப்ரவரி 13ம் தேதி வெளிவந்தது. இப்போது தனுஷ் - சிவகார்த்திகேயன் ஆகியோரின் அடுத்த படங்கள் நேரடியாக மோத வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.

தனுஷ் நடித்துள்ள 'மாரி' படம் ஜுலை 17ம் தேதி வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், அதே ஜுலை 17ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ரஜினி முருகன்' படம் வெளியாகும் என்று எப்போதோ அறிவித்தார்கள்.

முன்னராவது தனுஷ், சொன்னதை 'காக்கி சட்டை' படத்தின் வெளியீட்டாளர் கேட்டார். இப்போது 'ரஜினி முருகன்' படத்தைத் தள்ளி வெளியிடும்படி ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திடம் தனுஷால் கேட்க முடியுமா என கோலிவுட்டில் கேள்வி எழுப்புகிறார்கள்.


Post your comment





Related News
தனுஷ், சிவகார்த்திகேயனை விட விஜய் சேதுபதி தான் டாப்பு- எப்படி தெரியுமா?
இளைய தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்திய திரை பிரபலங்கள்!
தனுஷ் பட வசனத்தை பாடல் வரியாக்கிய சிவகார்த்திகேயன்!
தனுஷ் படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் பட விநியோகஸ்தர்!
தனுஷுடன் கிரிக்கெட் விளையாடிய சிவகார்த்திகேயன்
கமலின் பாபநாசம் - சிவ கார்த்திகேயன், தனுஷ் போட்டியை சமாளிக்குமா?
சிவகார்த்திகேயனுடன் மோதலா?: தனுஷ் பேட்டி
சிவ கார்த்திகேயனை தவிர்த்த தனுஷ்
தனுஷுடன் மோதலா? சிவகார்த்திகேயன் மறுப்பு
தனுஷிடமே விளையாடும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions