தமிழ் படங்களை சப்-டைட்டிலுடன் பார்க்கும் தோனி

Bookmark and Share

தமிழ் படங்களை சப்-டைட்டிலுடன் பார்க்கும் தோனி

‘காக்கா முட்டை’ சிறுவர்கள் கிரிக்கெட் வீரர் தோனியை நேரில் சந்தித்து கைகுலுக்கியதுதான் தற்போது இணையதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

‘காக்கா முட்டை’ சிறுவர்களான ரமேஷ்-விக்னேஷ் இருவருக்கும் தோனியை மிகவும் பிடிக்கும் என்பதால் அவர்களுக்கு ஆச்சர்யம் கொடுக்கும் விதமாக கடந்த சனிக்கிழமை ‘காக்கா முட்டை’ சிறுவர்கள் இருவரும் தோனியை சந்திக்க ஏற்பாடு செய்தது பாக்ஸ் ஸ்டார் நிறுவனம். 

அதன்படி, ‘காக்கா முட்டை’ சிறுவர்கள் இருவரும் தோனியை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பு மும்பையில் நடந்தது. அப்போது சிறுவர்களுடன் ‘காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டனும் உடனிருந்தார். தோனியை சந்தித்ததும் சிறுவர்களுக்கு ஒரு புதுவித உற்சாகம் எழுந்தது. தோனியுடன் ஒரு மணி நேரம் இவர்களின் சந்திப்பு நீண்டது. 

இந்த சந்திப்பின்போது, தோனிக்கு ‘காக்கா முட்டை’ படத்தின் சில காட்சிகள் சப்-டைட்டிலுடன் திரையிட்டு காண்பித்தனர். அந்த காட்சிகள் தனக்கு பிடித்திருப்பதாக தோனி அவர்களிடம் கூறினார். மேலும், சப்-டைட்டிலுடன் சில தமிழ் படங்களையும் தான் பார்த்துள்ளதாக அவர்களிடம் தோனி தெரிவித்தார்.


Post your comment





Related News
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா
ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!
தேசிய விருது பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!
ஒரு முட்டை யின் 50 சாதனை...!
காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி
காக்கா முட்டையை தொடர்ந்து காமெடி படம் எடுக்கும் மணிகண்டன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions