தோனிக்கு ஆதரவாக களமிறங்கிய விஜய் ரசிகர்கள்!

Bookmark and Share

தோனிக்கு ஆதரவாக களமிறங்கிய விஜய் ரசிகர்கள்!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை தழுவி ஹிந்தியில் எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி எனும் பெயரில் ஒரு படம் உருவாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் 60 நாடுகளில் 4500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று (செப்டம்பர் 30-ம் தேதி) மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.குறிப்பாக சென்னையில் இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

விஜய், அஜித் படங்களுக்கு இணையாக நேற்று பல இடங்களில் சென்னையில் காலை 8 மணிக்கெல்லாம் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் தோனிக்கு கட் அவுட் வைத்து விஜய் ரசிகர்கள் தங்களது ஆதரவை தோனிக்கு வழங்கியுள்ளனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions