இருபது ஹிட்டுகள் கொடுத்த கதாசிரியரை இயக்குனராக்கிய திலீப்..!

Bookmark and Share

இருபது ஹிட்டுகள் கொடுத்த கதாசிரியரை இயக்குனராக்கிய திலீப்..!

தமிழில் இரட்டை எழுத்தாளர்களான சுபா (சுரேஷ்-பாலா) பிரபலமான கதாசிரியர்களாக இருப்பது போல மலையாளத்தில் சிபி கே.தாமஸ்-உதயகிருஷ்ணா ஜோடியும் ரொம்பவே பாப்புலரானதுதான்.

இந்த கூட்டணியில் தற்போது சிபி கே.தாமஸ் முதன்முதலாக டைரக்சன் ஏரியாவில் கால் வைத்திருக்கிறார். இவரது முதல் படத்தின் ஹீரோவாக நடிக்க இருப்பவர் ஜனப்ரிய நாயகன் திலீப்.

பின்னே கிட்டத்தட்ட திலீபன் இருபது ஹிட் படங்களுக்கு கதை எழுதியவராயிற்றே.. சிபி படத்தை இயக்கினாலும் உதயகிருஷ்ணாவுக்கும் இதில் கதாசிரியராக முக்கிய பங்கு இருக்கிறது.

சிபியுடன் கூட்டணி சேர்வதற்கு முன்னரே பாலு காரியத், சந்தியா மோகன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்தான் உதயகிருஷ்ணா.. மற்றுமொரு முக்கியமான செய்தி, தற்போது விகாஷ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க இருக்கும் புலி முருகன் படத்திற்கு தனியாகவே கதை எழுதுகிறார் உதயகிருஷ்ணா.


Post your comment





Related News
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
நடிகர் திலீப் துபாய் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி
நடிகை கடத்தல் வழக்கு: ஜாமீனில் விடுதலையான திலீப்பிடம் இன்று மீண்டும் விசாரணை
நடிகை கடத்தல் வழக்கு: திலீப்பை முதல் குற்றவாளியாக்கி கூடுதல் குற்றப்பத்திரிகை தயாரிப்பு
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திலீப்
ஆமாம், மானபங்கப்படுத்தப்பட்ட நடிகைக்கும் எனக்கும் பிரச்சனை இருந்தது: நடிகர் திலீப்
பாவனாவை அசிங்கப்படுத்த நான் ஆள் அனுப்பவில்லை: பதறும் வாரிசு நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions