'அபூர்வ ஜீவி' யாக மாறிய திலீப்..!

Bookmark and Share

'அபூர்வ ஜீவி' யாக மாறிய திலீப்..!

சத்தியமாக இப்படியெல்லாம் கூட டைட்டிலுக்கு விளக்கம் சொல்வார்கள் என நீங்கள் எதிர்பார்க்கவே முடியாது. அதைத்தான் தற்போது திலீப் நடிக்கவுள்ள 'அபூர்வ ஜீவி' படத்தின் இயக்குனர் பைஜூ ஆறுக்குட்டியும் செய்துள்ளார்..

அபூர்வ ஜீவி என்றால் 'அதிசய பிறவி' என்கிற மாதிரி அர்த்தம் எல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டாம். படத்தில் ஹீரோவாக நடிக்கும் திலீப்பின் பெயர் ஜீ.வி.. அதாவது ஜார்ஜ் வடக்கன்.. அவர் கேரளாவில் உள்ள 'அபூர்வா' என்கிற ஸ்போர்ட்ஸ் கிளப்பில் மெம்பராக இருக்கிறார்.

அதனால் அவரை 'அபூர்வா ஜீ.வி' என அழைப்பார்களாம்.. காலப்போக்கில் அது 'அபூர்வ ஜீவி'யாக மாறிவிடுகிறதாம். இந்தப்படத்தில் எப்போதும் தனது நேரத்தை விளையாட்டு போட்டிகள் நடத்துவதிலேயே செலவிடுவாராம் திலீப்.

அதில் நடக்கும் விஷயங்கள் நான்ஸ்டாப் காமெடியாக இருக்கும் என்கிறார் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான அருண்கோஷ். காமெடிக்கு உத்தரவாதம் தரும் விதமாக நகைச்சுவை நடிகர் அஜு வர்கீஸ் திலீப்புடன் இணைகிறார்.

தற்போது ஜீத்து ஜோசப்பின் இயக்கத்தில் 'லைப் ஆப் ஜோஸுட்டி' படத்தில் நடித்துவரும் திலீப், அதை முடித்துவிட்டு இயக்குனர் ஷபியின் படத்தில் நடிக்க இருக்கிறார். அதன்பின்னர் 'அபூர்வ ஜீவி' படப்பிடிப்பு தொடங்கப்படும் என தெரிகிறது.


Post your comment





Related News
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
நடிகர் திலீப் துபாய் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி
நடிகை கடத்தல் வழக்கு: ஜாமீனில் விடுதலையான திலீப்பிடம் இன்று மீண்டும் விசாரணை
நடிகை கடத்தல் வழக்கு: திலீப்பை முதல் குற்றவாளியாக்கி கூடுதல் குற்றப்பத்திரிகை தயாரிப்பு
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திலீப்
ஆமாம், மானபங்கப்படுத்தப்பட்ட நடிகைக்கும் எனக்கும் பிரச்சனை இருந்தது: நடிகர் திலீப்
பாவனாவை அசிங்கப்படுத்த நான் ஆள் அனுப்பவில்லை: பதறும் வாரிசு நடிகர்
போலீஸ் விசாரித்ததா? பாவனா சம்பவம் பற்றி முதல்முறையாக வாய்திறந்த திலீப்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions