இன்னொரு திருமணம்... திலீப்பின் கருத்து என்ன...?

Bookmark and Share

இன்னொரு திருமணம்... திலீப்பின் கருத்து என்ன...?

விவாகரத்து பெற்ற பின் மலையாள நடிகர் திலீப்பும் நடிகை மஞ்சு வாரியரும் ஒருவரை ஒருவர் தாக்கி எந்தவித கருத்துகளும் சொல்லாமல் அமைதியாகவே தங்களது வேலைகளை பார்த்து வருகிறார்கள்.  

அந்த வகையில் “என் மகள், அவள் யாரிடம் இருக்க விரும்புகிறாளோ இருக்கட்டும். அவள் திலீப்புடன் இருக்கிறேன் என்று சொன்னாலும் நான் அதற்காக சண்டைபோட மாட்டேன். என்னிடம் இருப்பதை விட பத்திரமாகவே அங்கே இருப்பாள்.

அவள் விரும்பும்போது என் வீட்டிற்கு வந்து பார்த்துக்கொள்ளட்டும்” என்று முன்பே கூறிவிட்டார் மஞ்சு வாரியர். அதேபோல் இன்னொரு திருமணம் குறித்த திலீப்பின் நிலைப்பாடு என்ன என்பதை சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றின் மூலம் காண முடிந்தது.

அதாவது எதிர்காலம் குறித்த எதையும் திட்டமிட்டுக்கொள்ளவில்லை என்றும், எதிர்காலத்தில் இன்னொரு திருமணம் செய்தாலும் செய்யலாம், அல்லது செய்யாமலும் போகலாம் என்று பொத்தாம் பொதுவாக கூறியுள்ளார்.

மேலும் தங்களது பிரிவிற்கு வேறு ஒரு நடிகை தான் காரணம் என்றும் அந்த நடிகையைத்தான் திருமணம் செய்யப்போகிறார் என கிளம்பியுள்ள வதந்தியையும் கடுமையாக மறுத்துள்ள திலீப், இதுகுறித்து அவதூறு செய்தி வெளியிட்டவர்கள் மீது சைபர் க்ரைமிலும் புகார் கொடுத்துள்ளார்.


Post your comment





Related News
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
நடிகர் திலீப் துபாய் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி
நடிகை கடத்தல் வழக்கு: ஜாமீனில் விடுதலையான திலீப்பிடம் இன்று மீண்டும் விசாரணை
நடிகை கடத்தல் வழக்கு: திலீப்பை முதல் குற்றவாளியாக்கி கூடுதல் குற்றப்பத்திரிகை தயாரிப்பு
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திலீப்
ஆமாம், மானபங்கப்படுத்தப்பட்ட நடிகைக்கும் எனக்கும் பிரச்சனை இருந்தது: நடிகர் திலீப்
பாவனாவை அசிங்கப்படுத்த நான் ஆள் அனுப்பவில்லை: பதறும் வாரிசு நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions