12 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழுக்கு வருகிறார் திலீப்..!

Bookmark and Share

12 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழுக்கு வருகிறார் திலீப்..!

ஒருபக்கம் காமெடி கலந்த லைட் ஆக்சன் படங்கள்.. இன்னொருபக்கம் நடிப்புக்கும், கெட்டப் சேஞ்சிற்கும் தீனிபோடும் விதமான கதைகள் என இரட்டைக்குதிரையில் சவாரி செய்பவர் திலீப்... தென்காசிப்பட்டிணம் படத்தில் இவரது நடிப்பை பார்த்துவிட்டுத்தான் 2002ல் தமிழில் ராஜ்ஜியம் விஜயகாந்திற்கு தம்பியாக 'ராஜ்ஜியம்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது.

தமிழில் தான் நடித்த முதல் படம் தான் என்றாலும் அதில் தனது ஹீரோயிசத்தை எல்லாம் காட்டாமல் வாய்பேசமுடியாத ஊமையாக நடித்திருந்தார். அடுத்தடுத்து இவர் நடிக்கவில்லையே தவிர மலையாளத்தில் இவர் நடித்த படங்கள் சுந்தரா ட்ராவல்ஸ், சீனா தானா 007, மீசை மாதவன், பேரழகன், காவலன் என ரீமேக் வடிவத்தில் இங்கே தமிழில் கல்லா கட்டிகொண்டுதான் இருந்தன.

மீண்டும் தமிழுக்கு வருவது பற்றி நினைக்காமல் இருந்தவரை 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' இயக்குனர் மணிகண்டன் சொன்ன கதை மீண்டும் உசுப்பி விட்டுள்ளது. எந்த மொழியில் வாய்ப்பு வந்தாலும் நடிக்க தயாராக உள்ள திலீப், தற்போது கோடிராமகிருஷ்ணா இயக்கத்தில் சத்யசாய்பாவாக நடிப்பதன்மூலம்  தெலுங்கில் அடியெடுத்துவைக்கிறார்.

ஏற்கனவே இந்தியில் 'டூபான்' என்கிற பெயரில் ஒரு படம் இவர் நடிப்பில் வெளியானது. சமீபத்தில் கூட சிவராஜ்குமார் நடிக்கும் ஒரு கன்னடப்படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு ஆடிவிட்டு வந்தார். ஆக தமிழுக்கு வந்தால் ஒரு ஸ்திரமான இடத்தை பிடிப்பார் என நம்பலாம்.


Post your comment





Related News
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
நடிகர் திலீப் துபாய் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி
நடிகை கடத்தல் வழக்கு: ஜாமீனில் விடுதலையான திலீப்பிடம் இன்று மீண்டும் விசாரணை
நடிகை கடத்தல் வழக்கு: திலீப்பை முதல் குற்றவாளியாக்கி கூடுதல் குற்றப்பத்திரிகை தயாரிப்பு
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திலீப்
ஆமாம், மானபங்கப்படுத்தப்பட்ட நடிகைக்கும் எனக்கும் பிரச்சனை இருந்தது: நடிகர் திலீப்
பாவனாவை அசிங்கப்படுத்த நான் ஆள் அனுப்பவில்லை: பதறும் வாரிசு நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions