முற்பிறவியில் தான் யார்? - தேடலில் இறங்கும் திலீப்..!

Bookmark and Share

முற்பிறவியில் தான் யார்? - தேடலில் இறங்கும் திலீப்..!

சினிமாவை பார்த்து அதில் வருவது போல செய்துபார்க்கும், அல்லது அதில் சொல்லப்பட்டுள்ளது போல சோதித்து பார்க்கும் ஆவல் ரசிகர்களுக்குத்தான் இருக்கும். ஆனால் படத்தில் நடித்த நடிகரே கதையில் நடந்ததை நிஜத்தில் தேட முற்பட்டால் அது ஆச்சர்யமான விஷயம் தானே.

அப்படி ஒரு வேளையில் தான் இறங்கவுள்ளார் மலையாள ஜனப்ரிய நாயகன் திலீப். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சந்திரேட்டன் எவிடயா' படத்தில் இருந்துதான் இவருக்கு இந்த ஆர்வம் தோன்றியுள்ளதாம்.

சரி அந்த படத்தில் என்ன இருந்தது..? இவர் எதை பரிசோதித்து பார்க்க விரும்புகிறார்..? 'சந்திரேட்டன் எவிடயா' படத்தில் குடும்பத்துடன் ஒருமுறை தஞ்சாவூர் சுற்றுலா செல்லும் திலீப்பிற்கு, அங்கே இருக்கும் ஜோதிடர் ஒருவர் மூலமாக ஏடு ஜோதிடம் பார்க்கும்போது முன் ஜென்மத்தில் ராஜராஜ சோழன் காலத்தில் வாழ்ந்த கவிஞர் தான் திலீப் என்றும், அங்கே அரண்மனை நாட்டிய பெண்மணியாக இருந்தவரை காதலித்து, அது கைகூடாமல் போனதால் இந்த ஜென்மத்தில் அந்த காதலியை இவர் தேடி போகிறார் என்பதாகவும் கதை சொல்லப்பட்டிருந்தது. குடும்பக்கதைக்குள் ஒரு பூர்வஜென்ம கதையை நுழைத்து, காமெடியாக கதை சொல்லி ஆச்சர்யப்படுத்தியிருப்பார் இயக்குனர் சித்தார்த் பரதன்.

இப்போது உண்மையிலே போன ஜென்மங்களில் தான் யாராக இருந்திருப்போம் என்பதை தெரிந்துகொள்ளும் ஆவல் திலீப்பிற்கு ஏற்பட்டுள்ளதாம். கடவுள் பக்தியுள்ள திலீப், படத்திற்காக தஞ்சாவூர் சென்றதுபோல இப்போது மீண்டும் அங்கே விசிட் அடிக்க விரும்புகிறாராம். இந்த விசிட்டின்போது தனது முந்தைய ஜென்மங்கள் என்னனென்ன என்பதையும் அறிய ஆவலாக இருக்கிறாராம் திலீப்..!


Post your comment





Related News
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
நடிகர் திலீப் துபாய் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி
நடிகை கடத்தல் வழக்கு: ஜாமீனில் விடுதலையான திலீப்பிடம் இன்று மீண்டும் விசாரணை
நடிகை கடத்தல் வழக்கு: திலீப்பை முதல் குற்றவாளியாக்கி கூடுதல் குற்றப்பத்திரிகை தயாரிப்பு
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திலீப்
ஆமாம், மானபங்கப்படுத்தப்பட்ட நடிகைக்கும் எனக்கும் பிரச்சனை இருந்தது: நடிகர் திலீப்
பாவனாவை அசிங்கப்படுத்த நான் ஆள் அனுப்பவில்லை: பதறும் வாரிசு நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions