பி.எஸ்.என்.எல்லில் வேலைபார்க்கும் ஹீரோயினுக்கு திலீப் கொடுத்த வாக்கு..!

Bookmark and Share

பி.எஸ்.என்.எல்லில் வேலைபார்க்கும் ஹீரோயினுக்கு திலீப் கொடுத்த வாக்கு..!

மலேசியாவில் ரேடியோ ஜாக்கியாக வேலைபார்த்துக்கொண்டே படங்களில் நடித்துவரும் மீரா நந்தனைப்போலவோ, ஏர்ஹோஸ்டஸ் வேலைபார்த்துக்கொண்டே நடிப்பிலும் கவனம் செலுத்திவரும் ரீனு மேத்யூஸ் போலவோ அல்ல இப்போது சொல்லப்போகிற விஷயம்.. தற்போது திலீப் நடித்துவரும் 'சந்திரேட்டன் இவிடேயே' படத்தின் கதாநாயகியான அனுஸ்ரீயை பற்றியதுதான்.

சித்தார்த் பரதன் இயக்கும் இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக வேதிகா இருந்தாலும், திலீப்பின் மனைவியாக நடித்திருப்பது அனுஸ்ரீ தான். இதில் பி.எஸ்.என்.எல்லில் வேலைபார்க்கும் ஊழியராக நடித்திருக்கிறார் அனுஸ்ரீ.

இவரது முந்தைய படங்களான 'டயமண்ட் நெக்லஸ்' மற்றும் 'இதிகாசா' ஆகிய படங்களில் இருந்து இந்த கேரக்டர் முற்றிலும் மாறுபட்டு இருக்குமாம்.. 'இதிகாசா'வில் கிட்டத்தட்ட ஒரு ஆண்பிள்ளை போல நடித்து, சண்டைக்காட்சிகளில் சூறாவளியாய் சுழன்ற அனுஸ்ரீ, தற்போது 'சந்திரேட்டன் இவிடேயே' படத்தில் பாந்தமான குடும்பத்தலைவியாக நடிப்பதை.

அந்தப்பொண்ணா இது என படப்பிடிப்பு குழுவினர் ஆச்சர்யமாக பார்க்கிறார்களாம். திலீப் இன்னும் 'இதிகாசா' படத்தை பார்க்கவில்லை என்றாலும் படக்குழுவினர் அதில் நடித்த அனுஸ்ரீயின் நடிப்பை ஆஹா ஓஹோவென புகழ்வதை பார்த்து, விரைவில் அந்தப்படத்தை பார்ப்பதாக அனுஸ்ரீக்கு வாக்கு கொடுத்திருக்கிறாராம். 


Post your comment





Related News
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
நடிகர் திலீப் துபாய் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி
நடிகை கடத்தல் வழக்கு: ஜாமீனில் விடுதலையான திலீப்பிடம் இன்று மீண்டும் விசாரணை
நடிகை கடத்தல் வழக்கு: திலீப்பை முதல் குற்றவாளியாக்கி கூடுதல் குற்றப்பத்திரிகை தயாரிப்பு
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திலீப்
ஆமாம், மானபங்கப்படுத்தப்பட்ட நடிகைக்கும் எனக்கும் பிரச்சனை இருந்தது: நடிகர் திலீப்
பாவனாவை அசிங்கப்படுத்த நான் ஆள் அனுப்பவில்லை: பதறும் வாரிசு நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions