மலையாள நடிகர் திலீப் கட்டிய 3 தியேட்டருக்கு சிக்கல்

Bookmark and Share

மலையாள நடிகர் திலீப் கட்டிய 3 தியேட்டருக்கு சிக்கல்

மலையாள பட உலகில் பிரபல நடிகராக உள்ளவர் திலீப். இவர் திருச்சூர் அருகே உள்ள சாலக்குடியில் நவீன தியேட்டர் கட்டி உள்ளார். இங்கு ஒரே வளாகத்தில் 3 தியேட்டர்கள் அமைந்து உள்ளன.

நடிகர் திலீப் தியேட்டர் கட்டியுள்ள இடம் அரசு புறம்போக்கு நிலம் என்று திருச்சூரை சேர்ந்த கருணாகரன் என்பவர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் திலீப் தியேட்டர் கட்டி உள்ள இடம் அரசு புறம்போக்கு நிலமாக உள்ளதால் அந்த தியேட்டரை இடிக்க கலெக்டருக்கு கோர்ட்டு உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து இந்த புகாருக்கு விளக்கம் அளிக்கும்படி திருச்சூர் கலெக்டருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. கலெக்டர் அளித்த விளக்கத்தில் தியேட்டர் அமைந்துள்ள இடம் அரசு புறம்போக்கு நிலம் அல்ல என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் கருணாகரனின் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் கருணாகரன் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் திருச்சூர் கலெக்டர் அரசு புறம்போக்கு நிலம் தொடர்பாக தவறான தகவலை அளித்துள்ளதால் நில வருவாய் ஆணையர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதைதொடர்ந்து நில வருவாய் ஆணையர் விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நிலவருவாய் ஆணையர் விசாரணை நடத்தியதில் நடிகர் திலீப்பின் தியேட்டர் அமைந்துள்ள நிலத்தில் பெரும்பான்மையான நிலம் புறம்போக்கு இடம் என்பது தெரியவந்தது.

இதைதொடர்ந்து திருச்சூர் கலெக்டர் பிறப்பித்திருந்த உத்தரவை நில வருவாய் ஆணையர் ரத்து செய்தார். இதனால் திலீப்பின் தியேட்டருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை பற்றி நடிகர் திலீப் கூறும்போது எனது புகழுக்கு களங்கம் விளைவிக்க சிலர் செய்யும் சதிதான் இது. தியேட்டர் அமைந்துள்ள இடம் புறம்போக்கு நிலம் அல்ல. அதற்கு முறையான ஆவணங்கள் இருப்பதால்தான் வங்கியில் கடன் பெற முடிந்தது என்றார்.


Post your comment





Related News
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
நடிகர் திலீப் துபாய் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி
நடிகை கடத்தல் வழக்கு: ஜாமீனில் விடுதலையான திலீப்பிடம் இன்று மீண்டும் விசாரணை
நடிகை கடத்தல் வழக்கு: திலீப்பை முதல் குற்றவாளியாக்கி கூடுதல் குற்றப்பத்திரிகை தயாரிப்பு
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திலீப்
ஆமாம், மானபங்கப்படுத்தப்பட்ட நடிகைக்கும் எனக்கும் பிரச்சனை இருந்தது: நடிகர் திலீப்
பாவனாவை அசிங்கப்படுத்த நான் ஆள் அனுப்பவில்லை: பதறும் வாரிசு நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions