ஒரே படத்தில் தாத்தா-மகன்-பேரனாக நடிக்கிறார் திலீப்!

Bookmark and Share

ஒரே படத்தில் தாத்தா-மகன்-பேரனாக நடிக்கிறார் திலீப்!

பொதுவாக நம் ஹீரோக்கள், இரண்டு வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவது வழக்கமான ஒன்று. அதையும் தாண்டி ஒரு சிலர் மூன்று வேடங்களில் நடிப்பார்கள். ஆனால் அவையெல்லாம் ஒரு தந்தை இரு மகன்கள் என்கிற கதாபாத்திரங்களாகத்தான் இருக்கும். ஆனால் மலையாள நடிகர் திலீப் இதிலிருந்து மாறுபட்ட மூன்று வேடங்களில் நடிக்கிறார். ஆம்.. தந்தை-மகன்-பேரன் என மூன்று தலைமுறை கேரக்டர்களையும் ஒரே ஆளாக ஒரேசமயத்தில் பண்ண இருக்கிறார். ஆனால் இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை.. 

காரணம் மலையாள நடிகர்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் முதலிடத்தில் நிற்பவர் திலீப். சாந்துப்பொட்டு, குஞ்சுக்கூனன், பச்சகுதிர, சவுன்ட் தோமா, மாயமோகினி என விதவிதமான கெட்டப்புகளில் நடித்தவர், இப்போது மூன்று தலைமுறை கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்திற்கான கதையை சந்தோஷ் எச்சிக்கானம் என்பவர் எழுதுகிறார். இவர்தான் திலீப்பின் சமீபத்திய ஹிட்டான சந்திரேட்டன் எவிடயா படத்திற்கும் கதை எழுதியவர்.


Post your comment





Related News
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
நடிகர் திலீப் துபாய் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி
நடிகை கடத்தல் வழக்கு: ஜாமீனில் விடுதலையான திலீப்பிடம் இன்று மீண்டும் விசாரணை
நடிகை கடத்தல் வழக்கு: திலீப்பை முதல் குற்றவாளியாக்கி கூடுதல் குற்றப்பத்திரிகை தயாரிப்பு
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திலீப்
ஆமாம், மானபங்கப்படுத்தப்பட்ட நடிகைக்கும் எனக்கும் பிரச்சனை இருந்தது: நடிகர் திலீப்
பாவனாவை அசிங்கப்படுத்த நான் ஆள் அனுப்பவில்லை: பதறும் வாரிசு நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions