கேரள சட்டமன்ற பெட்டிஷன் செக்சனில் திலீப்புக்கு என்ன வேலை..?

Bookmark and Share

கேரள சட்டமன்ற பெட்டிஷன் செக்சனில் திலீப்புக்கு என்ன வேலை..?

மலையாள சினிமா கேமராமேனும் இயக்குனருமான சமீர் தாஹிரின் கோணத்தில் இருந்தே செய்தியை ஆரம்பிக்கலாம்.. மோஸ்ட் வான்டட் கேமராமேனாக உலா வந்த சமீர் தாஹிர், மலையாளத்தில் ஹிட்டடித்த  'சாப்பா குரிஷு' படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். இதுதான் தமிழில் 'புலிவால்' ஆக ரீமேக்கானது.

தொடர்ந்து துல்கர் சல்மானை வைத்து 'நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி' படத்தையும் இயக்கினார். அடுத்து இன்னொரு படத்தை இயக்குவார் என பார்த்தால் 'பெங்களூர் டேய்ஸ்' படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்ற போய்விட்டார்.

அதைமுடித்துவிட்டு என்ன செய்யலாம் என காத்திருந்தபோதுதான் இயக்குனர் சித்தார்த் பரதன், ஒரு ஷார்ட் பிலிம் கதையுடன் இவரை தேடிவந்தார். சித்தார்த் பரதனின் முதல் படமான 'நித்ரா' வின் கேமராமேன் சமீர் தானே.. அந்த நட்பின் அடிப்படையில் இருவரும் அந்த கதையை டெவலப் செய்ய, அதுதான் இப்போது சித்தார்த் பரதன் இயக்கத்தில் திலீப் கதாநாயகனாக நடிக்க 'சந்திரேட்டன் இவிடேயே' என்கிற படமாக வளர்ந்து வருகிறது.

இந்தப்படத்தை ஹேண்ட்மேட் பிலிம்ஸுடன் இணைந்து தயாரிப்பதன் மூலம் இணைத்தயாரிப்பாளராகவும் ஆகியுள்ளார் சமீர் தாஹிர். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தின் செகன்ட் யூனிட் கேமராமேனாகவும் பணியாற்றுகிறார்.

இந்தப்படத்தில் திலீப் கேரள சட்டமன்ற பெட்டிஷன் செக்சனில் வேலைபார்ப்பவராக நடிக்கிறார். வேலையை முடித்துவிட்டு கிளம்பிவிட்டால், இவருக்கு தனது நண்பர்கள் தான் உலகம். இவரது நண்பர்களாக பத்திரிகையாளர் கேரக்டரில் முகேஷும் புகழ்பெற்ற ஜோதிடர் வேடத்தில் சுராஜ் வெஞ்சாரமூடும் நடிக்கிறார்கள்.

திலீப்பின் மனைவியாக அனுஸ்ரீ நடிக்க, முக்கிய வேடத்தில் 'கேரளத்து புன்னகை இளவரசி' மீதா பிரமோத் நடிக்கிறார். திலீப்புடன் நமீதாவுக்கு இது மூன்றாவது படம். தற்போது பாண்டிச்சேரியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
நடிகர் திலீப் துபாய் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி
நடிகை கடத்தல் வழக்கு: ஜாமீனில் விடுதலையான திலீப்பிடம் இன்று மீண்டும் விசாரணை
நடிகை கடத்தல் வழக்கு: திலீப்பை முதல் குற்றவாளியாக்கி கூடுதல் குற்றப்பத்திரிகை தயாரிப்பு
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திலீப்
ஆமாம், மானபங்கப்படுத்தப்பட்ட நடிகைக்கும் எனக்கும் பிரச்சனை இருந்தது: நடிகர் திலீப்
பாவனாவை அசிங்கப்படுத்த நான் ஆள் அனுப்பவில்லை: பதறும் வாரிசு நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions