மலையாள திரையுலகையே அதிரவைத்த திருமணம்!

Bookmark and Share

மலையாள திரையுலகையே அதிரவைத்த திருமணம்!

மலையாள ஸ்டார் நடிகர் திலீப்பும் பிரபல நடிகை காவ்யா மாதவனும் இன்று காலை கொச்சியில் திருமணம் செய்துகொண்டது ரசிகர்களுக்கும் திரை பிரபலங்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதுவரை பல படங்களில் ஜோடியாக நடித்துள்ள இவர்கள், “நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும்தான். கல்யாணம் செய்துகொள்ளும் ஆசை எங்களுக்குள்இல்லை” என பலமுறை கூறியுள்ளார்கள்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மற்றொரு பிரபல நடிகை மஞ்சு வாரியரை விவாகரத்து செய்தார் திலீப். இவர்களுக்கு மீனாட்சி என்ற பெண் குழந்தை உள்ளது. அதேபோல் நிஷ்ஷால் சந்திரா என்ற தொழிலதிபருடன் திருமணமாகி கொஞ்ச நாட்களிலேயே விவாகரத்து பெற்றவர் காவ்யா மாதவன்.

இந்த திருமண நிகழ்ச்சியில் இருவருக்கும் நெருக்கமானவர்கள் மற்றும் மம்மூட்டி, மேனகா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இந்த திருமணம் தனது குழந்தையின் விருப்பப்படியே நடந்திருப்பதாக திலீப் கூறியுள்ளார்.


Post your comment





Related News
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
சினிமாவில் நடிக்க காதல் திருமணத்தை நிறுத்திய நடிகை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?
கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions