மூன்று வருடம் கழித்து மீண்டும் இணையும் திலீப் - பிஜுமேனன்..!

Bookmark and Share

மூன்று வருடம் கழித்து மீண்டும் இணையும் திலீப் - பிஜுமேனன்..!

இதுவரை நடிகர் திலீப்பும் பிஜுமேனனும் கிட்டத்தட்ட இருபது படத்திலாவது இணைந்து நடித்திருப்பார்கள். 2012ல் மட்டும்  'மாயமோகினி', ஸ்பானிஷ் மசாலா, 'மிஸ்டர் மருமகன்' என மூன்று படங்களில் இவர்கள் கூட்டணி சேர்ந்திருந்தனர்.

இப்போது மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை உருவாக்கும் வாய்ப்பு இயக்குனர் எஸ்.எல்.புரம் ஜெயசூர்யாவுக்கு கிடைத்திருக்கிறது. இந்த வருட இறுதியில் இதன் படப்பிடிப்பு துவங்கலாம் என தெரிகிறது.

அதென்ன எஸ்.எல்.புரம் ஜெயசூர்யா.? பெயரே வித்தியாசமாக இருக்கிறது இல்லையா.?. அதுபோல இவர் இயக்கியுள்ள 'தி ஸ்பீட் ட்ராக்', மற்றும் 'ஏஞ்சல் ஜான்' ஆகிய படங்களும் வித்தியாசமாகத்தான் இருந்துள்ளன.

இந்தப்படத்தை கூட திலீப்பே தனது சொந்த நிறுவனமான கிராண்ட் புரடக்சன் மூலமாக தயாரிக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மோகன்லாலை தேவதூதராக சித்தரித்து இவர் இயக்கிய 'ஏஞ்சல் ஜான்' படத்தில் தான் பாக்யராஜின் மகன் சாந்தனு மலையாளத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தகது.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions