திலீப்–காவ்யாமாதவன் திருமணம் செய்யப்போவதாக பேஸ்புக்கில் தகவல்: புரளி என இருவரும் மறுப்பு

Bookmark and Share

திலீப்–காவ்யாமாதவன் திருமணம் செய்யப்போவதாக பேஸ்புக்கில் தகவல்: புரளி என இருவரும் மறுப்பு

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் திலீப். புகழின் உச்சத்தில் இருந்தபோது, பிரபல நடிகை மஞ்சு வாரியரை காதல் திருமணம் செய்தார். இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இந்த நட்சத்திர ஜோடி பிரிந்தது.

இதற்கு காரணம் நடிகை காவ்யா மாதவனுடன் நடிகர் திலீப்புக்கு ஏற்பட்ட பழக்கமே என்று கூறப்பட்டது. ஆனால் இதனை இருவரும் மறுத்தனர். இந்தநிலையில் காவ்யா மாதவனை வருகிற 16–ந்தேதி குருவாயூர் கோவிலில் வைத்து நடிகர் திலீப் திருமணம் செய்ய இருக்கிறார் என்று கடந்த 1–ந்தேதி பேஸ்புக்கில் தகவல் பரவியது. நடிகர் திலீப்பின் ரசிகர்கள் இதனை அறிந்து அதிர்ச்சி ஆனார்கள்.

அவர்கள் நடிகர் திலீப்பை தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது:–

நான் திருமணம் செய்யப் போவதாக கடந்த ஓராண்டில் மட்டும் 15 முறை தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று தோன்றினால், அதை நானே உங்களுக்கு தெரிவிப்பேன். இப்போது வெளியாகி இருக்கும் தகவல் புரளி. அதில் எந்த உண்மையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல காவ்யாமாதவன் கூறும்போது, இந்த தகவலில் உண்மை இல்லை. அது வெறும் புரளி. எனது வாழ்க்கையில் ஏதாவது நல்ல தருணங்கள் ஏற்பட்டால் அதை நானே உங்களுக்கு தெரிவிக்கும் வாய்ப்பை எனக்கு தாருங்கள் என்றார்.


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions