திலீப்பின் வாழ்க்கையில் குறுக்கிடும் மூன்று பெண்கள்..!

Bookmark and Share

திலீப்பின் வாழ்க்கையில் குறுக்கிடும் மூன்று பெண்கள்..!

'த்ரிஷ்யம்' என்கிற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், தமிழில் தற்போது அதன் ரீமேக்காக கமலை வைத்து இயக்கிவரும் 'பாபநாசம்' படத்தை முடித்துவிட்டு மீண்டும் மலையாளத்தில் 'லைஃப் ஆப் ஜோஸுட்டி' என்ற படத்தை இயக்குகிறார் என்பது தெரிந்த செய்திதான்..

ஏற்கனவே 'மை பாஸ்' என்கிற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியபோதே அடுத்தடுத்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என முடிவு செய்திருந்தார்கள்.. அதன்பின் 'த்ரிஷ்யம்' ஹிட் மூலமாக உலக நாயகன் கமலை வைத்து இயக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டாலும் கூட, ஏற்கனவே கொடுத்த வாக்குப்படி திலீப்புடன் இணைந்து பணியாற்றி வருகிறார் ஜீத்து ஜோசப்.

இந்தப்படத்தில் ஜோஸுட்டி என்கிற மனிதனின் முப்பது வருட வாழ்க்கையைத்தான் கதையாக மாற்றியிருக்கிறார்கள். இடுக்கி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து, அங்கேயே திருமணமும் செய்துகொண்டு, பின்னாளில் நியூசிலாந்துக்கு பயணமாகும் அளவுக்கு டெவலப் ஆகிறார் திலீப்.

ஆனால் அங்கே வெவ்வேறு சூழலில் இன்னும் இரண்டு பெண்கள் அவரது வாழ்கையில் குறுக்கிடுகிறார்கள். அது அவரது வாழ்க்கை பயணத்தில் என்னவிதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை. ஜோதி கிருஷ்ணா மற்றும் ரக்சனா நாராயணமூர்த்தி இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, இன்னொரு கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை..


Post your comment





Related News
அஜித் ரசிகர்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வரும் ஹாஸ்டாக்- இது வேற லெவல் தான்
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தொடர்ந்து சக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை!
வசூலை வாரி குவிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து - இரண்டே நாளில் இவ்வளவா?
தன்னை பற்றி புத்தகம் எழுதியவருக்கு தளபதி கொடுத்த சர்ப்ரைஸ் - வெளிவந்த புகைப்படம்.!
தளபதி விஜய் பற்றிய "THE ICON OF MILLIONS " புத்தகம் நீதிபதி திரு. டேவிட் அன்னுசாமி அவர்களால் வெளியிடப்பட்டது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions