மஞ்சு வாரியாருக்கு ஆதரவாக ஒலித்த திலீப்பின் குரல்..!

Bookmark and Share

மஞ்சு வாரியாருக்கு ஆதரவாக ஒலித்த திலீப்பின் குரல்..!

நம் தமிழ்சினிமாவை பொருத்தவரை சில நடிகர்கள் தங்களது சக நடிகர்களுக்கு எதிரான பதிலடியை வசனங்களாக வைப்பதுண்டு.. படத்தின் கதையோடு இயல்பாய் இருப்பதாக தோன்றினாலும், யாரை தாக்கி பேசப்பட்டது என்பது அனைவருக்குமே நன்றாக புரியும்.

சரி ஹீரோ சொல்லிவிட்டால் இயக்குனர் வைத்துதானே ஆகவேண்டும். ஆனால் ஹீரோயின்கள் அப்படி இன்னொருவரை தாக்கி வசனம் பேச முடியுமா.? சான்ஸே இல்லை தானே.. னால் மலையாளத்தில் நடிகை மஞ்சு வாரியாருக்கு இது ஏதேச்சையாகவே அமைந்துவிட்டது.. அதுதான் தற்போது பிரச்சனைக்கும் வித்திட்டுள்ளது.

தனது கணவரான நடிகர் திலீப்பை மஞ்சு விவாகரத்து செய்த விவரம் ஊர் அறியும். மஞ்சு மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுத்த 'ஹவ் ஓல்டு ஆர் யூ' படத்தில் மஞ்சுவின் கணவரும் அவரது மகளும் மஞ்சுவை ஒரு பொருட்டாக மதிக்காமல் தங்களது சுயநலமே குறிக்கோளாக இருப்பதாக கதையே எதார்த்தமாக அமைந்திருந்தது.

நிஜத்தில் பார்க்கும்போது விவாகரத்தான மஞ்சுவை விட்டுவிட்டு தனது தந்தையுடன் தானே சென்று ஒட்டிக்கொண்டார் அவர்களது மகள் மீனாட்சி. இந்தக்காட்சியமைப்பை பார்த்த திலீப்பின் ரசிகர்கள் அப்போதே மஞ்சுவுக்கு எதிராக குரல் கொடுத்தார்கள்.

தற்போது வெளியாகியுள்ள 'என்னும் எப்பொழும்' படத்தில் கூட டார்ச்சர் செய்யும் தனது கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று விலகி வாழும் பெண்ணாகத்தான் நடித்திருந்தார் மஞ்சு வாரியர் இது போதாதா திலீப்பின் ரசிகர்களை மீண்டும் கொதிப்படைய வைக்க..? இந்த இரண்டு படங்களிலும் மஞ்சு வாரியர் திட்டமிட்டு திலீப்பின் கேரக்டரை அவமதிப்பு செய்துள்ளதாக கொந்தளித்தவர்கள் சமூக வலைதளங்களில் மஞ்சு வாரியாருக்கு எதிராக கருத்துக்களையும் கண்டனங்களையும் குவிக்க ஆரம்பித்தார்கள்..

ஆனால் சமீபத்தில் ஒரு டிவிக்கு திலீப் பேட்டியளித்தபோது, தனது ரசிகர்களை அமைதிப்படுத்தும் விதமாக, “சினிமாவை சினிமாவாக பார்க்கவேண்டும். படத்தில் இயக்குனர் கொடுக்கும் கதாபாத்திரத்தைத்தான் அவர் செய்கிறார். இதில் எந்த தவறுமில்லை” என மஞ்சுவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.


Post your comment





Related News
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!
பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்
பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு
நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை!
நடிகை மஞ்சுவாரியர் பற்றி பேஸ்புக்கில் அவதூறு கருத்து!
சைபர் கிரைமில் புகார் அளித்த மஞ்சு வாரியார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions