கோர்ட்டில் ஆஜர்: திலீப், மஞ்சுவாரியருக்கு நாளை விவாகரத்து?

Bookmark and Share

கோர்ட்டில் ஆஜர்: திலீப், மஞ்சுவாரியருக்கு நாளை விவாகரத்து?

மலையாள பட உலகில் மஞ்சுவாரியரும், திலீப்பும் முன்னணி நட்சத்திரங்களாக உள்ளனர். 1995–ல் ‘சல்லாபம்’ என்ற மலையாள படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தார்கள். அப்போது காதல் மலர்ந்தது. 1998–ல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பின் மஞ்சுவாரியர் சினிமாவில் நடிக்க வில்லை. இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் இருக்கிறார். 16 வருடங்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்திய இவர்கள் இல்லற வாழ்க்கையில் கடந்த வருடம் திடீரென புயல் வீசியது. இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். நடிகை காவ்யா மாதவனுக்கும் திலீப்புக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கள் பரவின. இதுவே தகராறுக்கு காரணம் என கூறப்பட்டது.

திலீப் வீட்டில் இருந்தும் மஞ்சுவாரியர் வெளியேறினார். திருச்சூரில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கினார். அத்துடன் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். மஞ்சுவாரியர் சினிமாவில் மீண்டும் நடிப்பது திலீப்புக்கு பிடிக்க வில்லை. இதனால் மோதல் தீவிரமானது. திலீப்பை பிரிந்த பிறகு காவ்யா மாதவன் நடித்த ஹவ் ஓல்டு ஆர்யு படம் கடந்த வருடம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. வசூலும் குவித்தது.

கடந்த ஜூலை மாதம் விவாகரத்து கேட்டு இருவரும் எர்ணாகுளம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மோகன் தாஸ் இருவரையும் அழைத்து பேசினார். விவாகரத்து முடிவை மறு பரிசீலனை செய்யும்படி 6 மாதம் அவகாசம் கொடுத்தார். அந்த அவகாசம் முடிவடைந்து நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மஞ்சுவாரியரும், திலீப்பும் நேரில் ஆஜரானார்கள்.

நீதிபதியிடம் சேர்ந்து வாழ முடியாது விவாகரத்து வேண்டும் என்று முறையிட்டனர். இதையடுத்து 31–ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். நாளை இருவருக்கும் விவாகரத்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!
பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்
பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு
நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை!
நடிகை மஞ்சுவாரியர் பற்றி பேஸ்புக்கில் அவதூறு கருத்து!
சைபர் கிரைமில் புகார் அளித்த மஞ்சு வாரியார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions