திலீப்–மஞ்சுவாரியருக்கு விவாகரத்து: மகளை திலீப் கவனிக்க கோர்ட்டு அனுமதி

Bookmark and Share

திலீப்–மஞ்சுவாரியருக்கு விவாகரத்து: மகளை திலீப் கவனிக்க கோர்ட்டு அனுமதி

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர தம்பதி திலீப்–மஞ்சுவாரியர். 16 ஆண்டுகளாக குடும்பம் நடத்திய இவர்கள் கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். விவாகரத்து கேட்டு எர்ணாகுளம் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.

கடந்த 6 மாதமாக நிலுவையில் இருந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்களிடம் பேசிய நீதிபதி இருவரும் சேர்ந்து வாழ விரும்புகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அவர்கள் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக கூறினர்.

இதையடுத்து இன்று வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதாக நீதிபதி கூறினார். இன்று பகல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தர விட்டார்.

மேலும், திலீப்– மஞ்சுவாரியருக்கு பிறந்த குழந்தை மீனாட்சி திலீப்புடன் இருக்கும் என்று கூறினார். இதற்கு மஞ்சு வாரியர் மறுப்பு தெரிவிக்கவில்லை. அப்போது திலீப், குழந்தை மீனாட்சியை மஞ்சுவாரியர் பார்க்க விரும்பும் போது வந்து பார்த்து செல்ல தடை விதிக்க மாட்டேன் என்றார்.


Post your comment





Related News
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!
பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்
பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு
நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை!
நடிகை மஞ்சுவாரியர் பற்றி பேஸ்புக்கில் அவதூறு கருத்து!
சைபர் கிரைமில் புகார் அளித்த மஞ்சு வாரியார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions