ஷங்கர் படத்தில் நடிக்க திலீப்புக்கு தடைபோட்ட மகள்...!

Bookmark and Share

ஷங்கர் படத்தில் நடிக்க திலீப்புக்கு தடைபோட்ட மகள்...!

மலையாள நடிகர் திலீப் தனது மனைவி மஞ்சு வாரியரை விவாகரத்து செய்தபின்னரும் கூட அவர்களது மகள் மீனாட்சி தாயுடன் செல்லாமல் தந்தையுடனேயே தங்கிவிட்டார்.

பொதுவாக பெண் குழந்தைகளுக்கு எப்போதுமே அப்பா மேல் பாசம் அதிகமாக இருக்கும் அல்லவா..?. அதனால் தனது மகள் மீனாட்சி பற்றி பேசினால் எவ்வளவு கவலையில் இருந்தாலும் திலீப்பின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்து விடுகிறது..

திலீப்பின் மகள் மீனாட்சி எந்த நிலையிலும் தனது தந்தையை விட்டுக்கொடுக்க விரும்பாதவர்.. அது திரையிலும் சரி.. நிஜத்திலும் சரி.. சில வருடங்களுக்கு முன்பு திலீப்பை தான் இயக்கும் நண்பன் படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தாராம் இயக்குனர் ஷங்கர்.

அதுபற்றி மகளிடம் திலீப் சொன்னபோது,

அமீர்கான் நடித்த கேரக்டரில் நடிக்கிறீர்களா என கேட்க, இல்லை என தலையாட்டியுள்ளார் திலீப். அப்படியானால் மற்ற இரண்டு கேரக்டர்களில் ஏதாவது ஒன்றா என கேட்க, அதற்கும் மறுத்து தலையாட்டியுள்ளார் திலீப்.  

உடனே தனது தந்தையிடம் அந்த மூன்று கேரக்டர்கள் தவிர, நான்காவதாக எந்த கேரக்டரில் நடிக்க கூப்பிட்டாலும் நீங்கள் போகக்கூடாது என்றும் அப்படி மீறி நடித்தால் உங்களுடன் பேசமாட்டேன் என்றும் உத்தரவு போட்டுவிட்டாராம்.

தனது  தந்தை மற்றவர்களால் கிண்டல் செய்யப்படும் கேரக்டராக இறங்கி நடிப்பதை மகள் விரும்பவில்லையாம். அதனாலேயே ஷங்கர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்துவிட்டாராம் திலீப்.. சமீபத்தில் திலீப் தனது மகளைப்பற்றி பெருமிதமாக ஒரு பேட்டியில் கூறியபோது இந்த விஷயம் வெளிவந்துள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions