வத்திக்குச்சி திலீபன் நடிக்கும் குத்தூசி!

Bookmark and Share

வத்திக்குச்சி திலீபன் நடிக்கும் குத்தூசி!

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வெளியான படங்களில் வத்திக்குச்சியும் குறிப்பிடத்தக்க படம். இந்த படத்தில் முருகதாஸின் சித்தி மகனான திலீபன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருந்தார்.

முதல் படத்திலேயே அதிரடியான ஒரு ஆக்சன் கதையில் நடித்திருந்த திலீபன் அந்த படத்தை ரொம்பவே எதிர்பார்த்தார். ஆனால், படம் வெற்றி பெறவில்லை. அதனால், அடுத்தபடியாக அவரை வைத்து படம் இயக்க கதை சொல்லியிருந்தவர்கள் பின் வாங்கினர்.

அதனால் ஒரு வருட இடைவெளிக்குப்பிறகு குத்தூசி என்ற படத்தில் ஒப்பந்தமானார் திலீபன். அந்த படம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த தாமதம் பற்றி விசாரித்தபோது, குத்தூசி படம் வத்திக்குச்சியை விட ஒரு அதிரடியான கதையில் உருவாகிறதாம். மாஸ் ஹீரோக்கள் நடிக்க வேண்டிய கதையில் திலீபன் நடிக்கிறாராம்.

அதனால் ஒவ்வொரு காட்சியையும் ஹோம் ஒர்க் பண்ணி அதிக காலஅவகாசம் எடுத்து நடித்து வருவதாக சொல்கிறார்கள். மேலும், இந்த படத்திற்காக ஜிம்முக்கு சென்று தனது உடல்கட்டையும் மாற்றி பக்கா ஆக்சன் ஹீரோவாக மாறியிருக்கும் திலீபன், வித்தியாசமான கெட்டப்புகளிலும் தோன்றுகிறாராம்.

அதோடு, படத்தை முடித்ததும், ஏ.ஆர்.முருகதாஸிடம் போட்டு காண்பித்து ப்ரமோஷனுக்கான வேலைகளில் பரபரப்பாக முடுக்கி விடவும் திட்டமிட்டுள்ளாராம் அவர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions