வெளிநாட்டில் தயாராகும் திலீப்பின் புதிய படம் - 'தம்பிச்சன் இன் தாய்லாந்து'..!

Bookmark and Share

வெளிநாட்டில் தயாராகும் திலீப்பின் புதிய படம் - 'தம்பிச்சன் இன் தாய்லாந்து'..!

திலீப் அப்படித்தான். பாடல்களுக்காக மட்டுமெல்லாம் வெளிநாடு போக விரும்புவது இல்லை. கிளம்பினால் முழுப்படத்தையும் வெளிநாட்டிலேயே முடித்துவிட்டு வரவேண்டும் என்பதுதான் அவரது பிளான்..

எப்படியும் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இப்படி ஒரு வெளிநாட்டு பின்னணி கதை அமையுமாறு கவனமாக பார்த்துக்கொள்வார். 2011ல் 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்', 2012ல் வெளியான 'ஸ்பானிஷ் மசாலா' எல்லாம் திலீப் வெளிநாட்டில் வசிப்பதுபோல எடுக்கப்பட்ட படங்கள் தான்.

இப்போது அப்படி ஒரு கதையை இயக்குனர் ஷாஜி சுரேந்திரன் கொண்டுவந்து நீட்டினால் சும்மா இருப்பாரா.? உடனே தாய்லாந்திற்கு டிக்கெட்டை போடச்சொல்லிவிட்டார். பின்னே படத்தின் பெயரே 'தம்பிச்சன் இன் தாய்லாந்து' தானே.

படத்தின் கதையை எழுதுபவர் ஷாஜி சுரேந்திரனின் ஆஸ்தான கதாசிரியரான கிருஷ்ணன் பூஜப்புரா தான். தற்போது அனூப் மேனனை வைத்து 'புளுவன் மத்தாய்', 'ஷி டாக்ஸி' என இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி முடித்துள்ள ஷாஜி சுரேந்திரன் தற்போது அவற்றின் போஸ்ட் புரொடக்சன் வேலைகளில் பிசியாக உள்ளார்.

ஒரு முக்கியமான விஷயம், மலையாளத்தில் தயாராகி தமிழில் டப் செய்யப்பட்டு கமல் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தாரே 'அன்புள்ள கமல்' என்கிற படம், அதை இயக்கியதும் இந்த ஷாஜி சுரேந்திரன் தான்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions