செல்போன் நம்பரால் திலீப் படத்துக்கு புதிய சிக்கல்..!

Bookmark and Share

செல்போன் நம்பரால் திலீப் படத்துக்கு புதிய சிக்கல்..!

கடந்த மாதம் திலீப் நடிப்பில் வெளியான படம் தான் 'சந்திரேட்டன் எவிடயா' திலீப்பிற்கு கிட்டத்தட்ட ரீ என்றி கொடுத்திருக்கும் படம். இதில் மனைவியை சொந்த ஊரில் விட்டுவிட்டு, டவுனில் அரசு அலுவலகம் ஒன்றில் வெளிபார்க்கும் திலீப்புக்கு அங்கே ஒரு நாட்டிய பெண்மணியுடன் காதல் ஏற்படும்.

அப்போது தனது நம்பரை நாட்டிய பெண்மணியாக நடித்த நமீதா பிரமோத்திடம் சொல்வார் திலீப். இப்போது படத்திற்கு சிக்கலே இங்கிருந்துதான் ஆரம்பித்திருக்கிறது. அதாவது திலீப் தனது நம்பரை சொல்லும்போது பத்து எண்களையும் சொல்வார்.

பொதுவாக இது போன்ற காட்சிகளில் படக்குழுவினரில் யாராவது பயன்படுத்தும் ஒரு மொபைல் எண்ணைத்தான் பயன்படுத்துவது வழக்கம்.. அல்லது கடைசி இரண்டு நம்பரை சொல்லாமலேயே விட்டுவிடுவார்கள். ஆனால் இந்தப்படத்தில் இவர்கள் பயன்படுத்திய செல்போன் நம்பர் ஒரு குடும்பத்தலைவியுடையதாம்.

படத்திற்கும் இவருக்கும் துளிகூட சம்பந்தம் இல்லை.. ஆனால் படம் வெளியான நாளில் இருந்து அவரது போனிற்கு தினமும் அழைப்புகளும், மெசேஜ்களும் வந்தவண்ணம் இருக்கின்றனவாம்..

எதிர்முனையில் அட்டென்ட் பண்ணுவது ஒரு பெண் என தெரிந்ததால், பலர் ஆபாசமாக பேசவும், செய்தி அனுப்பவும் ஆரம்பித்துவிட்டார்களாம். அதனால் தற்போது இந்தப்படத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் அந்த பெண்மணி.

படத்தில் இடம்பெறும் தனது நம்பரை நீக்கும் வரை படத்தை திரையிட தடைவிதிக்க வேண்டும் என்றும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளாராம் அந்த பெண்மணி.

 


Post your comment





Related News
பாவனா பலாத்கார சி.டி.யை வழங்க முடியாது - திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
பேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தமிழ் நடிகர் மீது கார் தரகர் போலீசில் புகார்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
இந்தி நடிகர் திலீப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
காவ்யாவை விட்டுவிடுங்கள் – திலீப்பிடம் கெஞ்சிய மஞ்சு?
மகளிடம் அனுமதி வாங்கியே காவ்யாவை திருமணம் செய்தேன்: திலீப் பேட்டி
இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ்!
சங்குசக்கரம் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தது!
பழம்பெரும் பாலிவுட் கதாநாயகன் திலிப் குமார் கவலைக்கிடமாக ஆஸ்பத்திரியில் அனுமதி
திலிப் சுப்பராயனின் நடிப்பில் நக்கல், நையாண்டி கலந்த ‘சங்குச்சக்கரம்’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions