இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ்!

Bookmark and Share

 இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ்!

தற்போது பாகிஸ்தான் நாட்டின் ஒருபகுதியாக இருக்கும் பெஷாவர் நகரில் 1922-ம் ஆண்டு பிறந்த திலிப் குமார், 1944-ம் ஆண்டு வெளியான ‘ஜுவார் பாட்டா’ திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார்.

‘அந்தாஸ்’, ‘தேவதாஸ்’, ‘மொகலே ஆஸம்’, ‘ஆஸாத்’ உள்பட சுமார் 60 படங்களில் நாயகனாக நடித்த திலிப் குமார், தனது தனித்துவமான நடிப்புத்திறனால் ரசிகர், ரசிகைகளின் உள்ளங்களில் நீங்காதஇடம் பிடித்தார்.

8 பிலிம்பேர் விருதுகளை ஒருசேர பெற்ற ஒரே நடிகர் என்ற சிறப்புக்குரிய இவர், பிலிம்பேர் அளித்த சிறந்த நடிகர் பட்டத்தை பெற்ற முதல்நபருமாவார்.
 
இதுதவிர, 1991-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மபூஷன் விருது, 1994-ம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருது, 1997-ம் ஆண்டு பாகிஸ்தான் வழங்கிய நிஷான் இ இம்தியாஸ் விருது, 2015-ம் ஆண்டு பதம்விபூஷன் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ள திலிப் குமாரின் இயற்பெயர் முஹம்மது யூசுப் கான். 

பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினராக ஐந்தாண்டுகள் பதவி வகித்த இவர், தனது இரண்டாவது மனைவி சாய்ரா பானுவுடன் மும்பையில் வசித்து வருகிறார்.

கடந்த 15-ம் தேதி பின்னிரவு திடீரென்று சளி, கபம் சார்ந்த காரணங்களால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, மும்பையில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட திலிப் குமாருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 

ஆரம்பத்தில், சற்று கவலைக்கிடமான் நிலையில் இருந்த திலிப் குமார் நான்குநாட்களாக அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் பலனாக குணம் அடைந்தார்.

இனியும் அவர் ஆஸ்பத்திரியில் தங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லாததால், இன்று மாலை 4 மணியளவில் திலிப் குமார் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என லீலாவதி ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்தனர். 


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions