“இதுவரை பட்டது போதாதா..?” - திலீப்பை செல்லமாக கண்டித்த மகள்..!

Bookmark and Share

“இதுவரை பட்டது போதாதா..?” - திலீப்பை செல்லமாக கண்டித்த மகள்..!

பொதுவாக பெண் குழந்தைகளுக்கு எப்போதுமே அப்பா மேல் பாசம் அதிகமாக இருக்கும். இதில் சினிமாவில் நடிக்கும் ஹீரோக்கள் என்றாலும் அவர்களது குழந்தைகளுக்கு அவர்கள் அப்பா தானே.. பெரும்பாலான மகள்கள் தங்கள் தந்தை தனது அம்மாவை விவாகரத்து செய்த பின்னரும் கூட தந்தையுடனே வசிப்பதை, அவரது புதிய உறவுகளை, குடும்பத்தை அங்கீகரித்துக்கொள்வது நாம் பார்த்து வருவதுதானே..

சரத்குமாரின் மகள் வரலட்சுமி, கமலின் மகள் ஸ்ருதி, பார்த்திபன் மகள் கீர்த்தனா என பல உதாரணங்கள் இங்கே உண்டு. அதேபோல மலையாள நடிகர் திலீப் தனது மனைவி மஞ்சு வாரியரை விவாகரத்து செய்தபின்னரும் கூட அவர்களது மகள் மீனாட்சி தாயுடன் செல்லாமல் தந்தையுடனேயே தங்கிவிட்டார்.

சமீபத்தில் தான் மறுமணம் செய்துகொள்வது குறித்து விளக்கம் அளித்திருந்தார் அல்லவா..? இதற்கு அவரது மகளின் ரியாக்சன் என்னவாக இருக்கும் என்பதற்கு ஒரு சுவையான நிகழ்வு ஒன்றை பார்க்கலாம்.

சமீபத்தில் ஒரு பத்திரிக்கை ஒன்றை தனது வீட்டிற்கு வரவழைத்து பேட்டியளித்த திலீப், அப்போது தனது புதிய படம் ஒன்றில் அறிமுகப்படுத்துவதற்காக தன்னிடம் வந்த புகைப்படங்களை அவர்களிடம் காட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ஏதேச்சையாக வந்த அவரது மகள் மீனாட்சி இந்த போட்டோக்களில் இருப்பது யார் என கேட்டுள்ளார். அதற்கு திலீப்பும் தமாஷாக, இதெல்லாம் தான் மறுமணம் செய்வதற்காக தனக்கு அனுப்பட்டுள்ள புகைப்படங்கள் என கூற, “ஏன்.. இதுவரைக்கும் பட்டதெல்லாம் பத்தாதா..?” என செல்லமாக முறைத்தபடி சொன்னாராம்..

இதிலிருந்து திலீப்பின் மறுமணம் குறித்தும், தனது மனைவியுடன் திலீப் நடத்திய வாழ்க்கை குறித்தும் அவரது மகளின் எண்ணம் என்ன என்பது தெளிவாக தெரிகிறது அல்லவா..?


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions