ஆறுவருடம் கழித்து மீண்டும் இணையும் திலீப் - சீனிவாசன்..!

Bookmark and Share

ஆறுவருடம் கழித்து மீண்டும் இணையும் திலீப் - சீனிவாசன்..!

பிரபல கதாசிரியர், இயக்குனர் நடிகர் என பல முகங்கள் கொண்ட சீனிவாசன், சூப்பர்ஸ்டார்களான மோகன்லால், மம்முட்டி ஆகியோருடன் இணைந்து பல படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

ஆனால் நடிகர் திலீப்பும் இவரும் இத்தனை வருடங்களில் இணைந்து நடித்த படங்கள் வெறும் ஐந்து மட்டும் தான் என்பது உண்மையிலேயே ஆச்சர்யமான விஷயம் தான்... அதனாலேயே இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும்போது அந்தப்படம் ரசிகர்களிடம் சிறப்பு கவனம் பெறும்.

கடைசியாக 2009ல் இவர்கள் இருவரது நடிப்பில் 'பாஸஞ்சர்' என்கிற படம் வெளியானது. தினசரி ரயில் பயணத்தின்போது தான் சந்திக்கும் யாரோ ஒருவருக்கு ஆபத்து என்றதும் தனது உயிரையும் பொருட்படுத்தாது அவரை காப்பாற்ற கிளம்பும் ஒரு பயணியாக சீனிவாசனும் அவருக்கு துணையாக வரும் ஒரு டாக்ஸி ட்ரைவராக நெடுமுடி வேணுவும் நடித்திருந்தார்கள்.

அந்தப்படத்தில் திலீப் தான் கதாநாயகன் என்றாலும் அவரைவிட அதிக காட்சிகளில் படம் முழுக்க வந்த சீனிவாசனும் நெடுமுடி வேணுவும் ரசிகர்களை தங்களது நடிப்பால் வெகுவாக கவர்ந்தார்கள்.

அதை தொடர்ந்து இப்போது ஆறுவருடம் கழித்து திலீப்பும் சீனிவாசனும் மீண்டும் இணைகிறார்கள். அறிமுக இயக்குனர் ஜான்பால் இயக்கும் இந்தப்படத்தில் திலீப் பிராமினாகவும் சீனிவாசன் கிறிஸ்துவ மத பாதராகவும் நடிக்க இருக்கிறார்கள்.

நான்கு பேரின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. கதைக்களத்தின் முக்கிய பகுதியாக திருநெல்வேலி மற்றும் மார்த்தாண்டம் ஆகிய பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions