ஹீரோவாக மாறும் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்

Bookmark and Share

ஹீரோவாக மாறும் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்

‘ஜில்லா’, ‘மான் கராத்தே’, ‘வாலு’, ‘புலி’, ‘நானும் ரௌடிதான்’ உள்ளிட்ட பல படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர் திலீப் சுப்பராயன். இவர் சில படங்களில் ஒருசில காட்சிகளிலும் தலைகாட்டியுள்ளார். இவர் தற்போது விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்திற்கும் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். 

இந்நிலையில், திலீப் சுப்பராயன் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக அவதாரம் எடுக்கவுள்ளார். மாரீசன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் ‘சங்கு சக்கரம்’ என்ற படத்தில்தான் திலீப் சுப்பராயன் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். 

காமெடி திரில்லராக உருவாகவிருக்கும் இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள்தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். ‘பசங்க-2’ படத்தில் நடித்த நிஜேஷ் என்ற சிறுவன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறான். 

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இவர் தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜில் ஜங் ஜக்’ படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பாவனா பலாத்கார சி.டி.யை வழங்க முடியாது - திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
பேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தமிழ் நடிகர் மீது கார் தரகர் போலீசில் புகார்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
இந்தி நடிகர் திலீப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
காவ்யாவை விட்டுவிடுங்கள் – திலீப்பிடம் கெஞ்சிய மஞ்சு?
மகளிடம் அனுமதி வாங்கியே காவ்யாவை திருமணம் செய்தேன்: திலீப் பேட்டி
இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ்!
சங்குசக்கரம் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தது!
பழம்பெரும் பாலிவுட் கதாநாயகன் திலிப் குமார் கவலைக்கிடமாக ஆஸ்பத்திரியில் அனுமதி
திலிப் சுப்பராயனின் நடிப்பில் நக்கல், நையாண்டி கலந்த ‘சங்குச்சக்கரம்’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions