3 நாளில் 100 கோடியைக் கடந்த தில்வாலே!

Bookmark and Share

3 நாளில் 100 கோடியைக் கடந்த தில்வாலே!

பாலிவுட்டின் இருபெரும் படங்களான தில்வாலே, பாஜிராவ் மஸ்தானி ஆகிய இரண்டு படங்கள் கடந்த வெள்ளிக் கிழமையன்று வெளிவந்தன. இதில் தில்வாலே படத்தை விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்த போதும் தில்வாலே படம் 100 கோடி ரூபாய் வசூலை மூன்றே நாட்களில் கடந்து விட்டது.

தில்வாலே படம் இந்தியாவில் முதல் நாளில் 21 கோடி, இரண்டாவது நாளில் 20 கோடி, மூன்றாவது நாளில் 24 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். ஆக மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் சுமார் 65 கோடியை வசூலித்த இந்தப் படம் வெளிநாடுகளில் சுமார் 50 கோடி வரை வசூலித்துள்ளது என்கிறார்கள். 

மொத்தமாக மூன்று நாட்களில் 115 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் கடந்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே சமயம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் 145 கோடி ரூபாய் வசூலானதாகத் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
கர்நாடகாவில் தில்வாலே படத்தை திரையிட விடாமல் விஷ்வ ஹிந்து பரிஷத் அராஜகம்
முதல்நாள் ரூ.21 கோடியை வசூலித்த தில்வாலே படம்!
வெள்ள நிவாரணத்திற்கு ஷாருக்கான் 50 கோடி ? வியந்த பாலிவுட்
ஷாரூக் எதிர்பார்க்கும் லாபத்தை தருமா தில்வாலே...
டாக்குமென்டரி ஆகும் காதல் காவியம்
தில்வாலே இசை உரிமையை வாங்கிய சோனி மியூசிக்
தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே படம் மீண்டும் ஒளிபரப்பு
1009 வாரமாக உள்ளத்தை அள்ளிய \"தில்வாலே\".. இன்றே கடைசி... மராத்தா மந்திரில்!
கஜோலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஷாருக்
ஷாருக்கானின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே சாதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions