1009 வாரமாக உள்ளத்தை அள்ளிய "தில்வாலே".. இன்றே கடைசி... மராத்தா மந்திரில்!

Bookmark and Share

1009 வாரமாக உள்ளத்தை அள்ளிய

உலகின் எந்த மொழி திரைப்படமும் இதுவரை சாதித்திராத, இனியும் சாதிக்க முடியாத ஒரு உச்ச கட்ட சாதனை ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ என்ற திரைப்படம் செய்துள்ளது. திரையரங்கில் 3 வாரம் ஓடினாலே வெற்றி நடை போடுவதாக சொல்லப்படும் இந்தக் காலத்தில் 1009 வாரமாக ஒரு திரைப்படம் ஒரே திரையரங்கில் திரையிடப்படுவது வெறும் சாதனை அல்ல. அதுக்கும் மேல....

ஷாருக்கான், கஜோல் நடிப்பில், கடந்த 1995-ம் வருடம், அக்டோபர் மாதம் வெளியான இந்தி படம் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே. இத்திரைப்படம் வெளியான நாளிலிருந்து சுமார் 20 வருடங்களாக மும்பையிலுள்ள ‘மராத்தா மந்திர்’ என்ற தியேட்டரில் தினமும் காலை 11-30 காட்சியாக தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தின் 1000-மாவது காட்சி இந்த திரையரங்கில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட நிலையில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களை சரியாகத் திரையிடமுடியாத காரணங்களால் இன்று காலையே திரைப்படத்தின் கடைசி காட்சி என்று திரையரங்க நிர்வாகம் அறிவித்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரியக்காட்சியை 210 ரசிகர்கள் கண்டு களித்தனர்.

20 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து தினமும் ஷாருக்-கஜோலின் காதலை சலிக்காமல் ரசித்து வந்த பல ரசிகர்கள் இனி இந்த  திரைப்படத்தை இந்த தியேட்டரில் காண முடியாது என்பதால் ஏக்கமடைந்துள்ளனர். 


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions