கர்நாடகாவில் தில்வாலே படத்தை திரையிட விடாமல் விஷ்வ ஹிந்து பரிஷத் அராஜகம்

Bookmark and Share

கர்நாடகாவில் தில்வாலே படத்தை திரையிட விடாமல் விஷ்வ ஹிந்து பரிஷத் அராஜகம்

மிக நீண்ட வருடங்களுக்கு பிறகு ஷாருக் கான், கஜோல் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘தில்வாலே’ படத்திற்கு, பாஜக, விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், படம் திரையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தி நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் தன்னுடைய 50-வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவர் சகிப்பின்மை குறித்து தெரிவித்த கருத்து மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஷாருக்கான் நடிப்பில் தயாரான ‘தில்வாலே’ படம் கடந்த வெள்ளிக் கிழமை நாடு முழுவதும் திரைக்கு வந்தது. இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இந்துத்துவா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் தில்வாலே படத்தினை திரையிட விடாமல் விஷ்வ ஹிந்து பரீஷத் மற்றும் பஜ்ரங் தால் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் தில்வாலே படம் திரையிடப்படவில்லை.

மங்களூரு மற்றும் சுரத்கால் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் முன்பாக அவர்கள் தொடர் போராட்டத்தில்ல் ஈடுபட்டனர். மேலும் படத்தை திரையிடக்கூடாது என்று பணியாளர்களையும் மிரட்டியுள்ளனர். இதனால் அப்பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக ‘தில்வாலே’ படத்திற்கான விளம்பர நிகழ்ச்சியின் போது ஷாருக்கான், தனது கருத்திற்காக மன்னிப்பு கோரி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions