தினேஷ், ஜி.வி.பிரகாஷ் படங்களை வாங்கிய தேனான்டாள் பிலிம்ஸ்!

Bookmark and Share

தினேஷ், ஜி.வி.பிரகாஷ் படங்களை வாங்கிய தேனான்டாள் பிலிம்ஸ்!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘புரூஸ்லீ’. இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.

ஜி.வி.க்கு ஜோடியாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்த கீர்த்தி கர்பந்தா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 

இதேபோல், ‘அட்டக்கத்தி’ தினேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘ஒருநாள் கூத்து’. இப்படத்தில் மியா ஜார்ஜ், கருணாகரன், ரித்விகா, பாலசரவணன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கிறார். 

விரைவில் வெளிவரவிருக்கும் இவ்விரு படங்களையும் கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் செல்வகுமார் தயாரித்துள்ளார். இந்நிலையில், இவ்விரு படங்களின் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர் உரிமையை தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. 

தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடும் படங்கள் அனைத்துமே, தற்போது வெற்றிப் படங்களின் வரிசையில் உள்ளன. எனவே, இவ்விரு படங்களும் வெற்றி பெறும் என நம்பிக்கை இருக்கிறது.


Post your comment





Related News
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions