சிஷ்யன் தயாரிப்பில் குரு இயக்கும் படம்

Bookmark and Share

சிஷ்யன் தயாரிப்பில் குரு இயக்கும் படம்

தமிழில், “கோபுர வாசலிலே, சினேகிதியே, லேசா லேசா, காஞ்சிவரம்” உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான பிரியதர்ஷன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி மற்றும் பலர் நடிக்க உள்ளனர். பிரியதர்ஷனின் முன்னாள் சிஷ்யரான இயக்குனர் விஜய் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். 

இந்தப் படம் எய்ட்ஸ் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இருக்குமாம். ஆனால், ஒரு டாகுமெண்டரி போல கண்டிப்பாக இருக்காது என்று சொல்லியுள்ளாராம். காஞ்சிவரம் படத்தில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டிதான் நடித்திருந்தனர்.

காஞ்சிவரம் படம் தமிழில் சிறந்த படமாகவும், பிரகாஷ்ராஜுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த படமாக அமைந்தது. மீண்டும் அவர்களுடனேயே புதிய படத்தின் மூலம் களம் இறங்குகிறார் பிரியதர்ஷன். 

நேற்றுதான் சிஷ்யன் கார்த்தி நடிக்க குரு மணிரத்னம் இயக்கும் படம் பற்றிய தகவல் வெளியானது. இன்று சிஷ்யன் தயாரிக்க குரு இயக்கும் படம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. 


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
"மோகினி" திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. - இயக்குனர் R. மாதேஷ்
தங்கமீன்கள், தரமணி இயக்குனருக்கு சர்வதேச அளவில் கிடைத்த புது அங்கிகாரம்!
இளம் இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறாரா தனுஷ்? வெளியான தகவல்
கார்ப்பரேட் நிறுவனங்களால் சினிமா துறை சீரழிந்து வருகிறது: இயக்குனர் சேரன் வேதனை
மெர்சல் விவகாரம்: எச்.ராஜா மன்னிப்பு கேட்க இயக்குனர் கவுதமன் வலியுறுத்த
அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது ஏன்? சுசீந்திரன் விளக்கம்
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions